என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

|

மும்பை: பாலிவுட்டில் தயாராகும் படத்தில் நடித்து வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ ஷூட்டிங்கில் அதகளம் செய்து வருகிறாராம். என் டான்ஸ் எப்படி இருக்கு என்று கதாநாயகியை கலாய்த்துள்ளார் பிரெட் லீ.

கிரிக்கெட் களமானாலும், ஷூட்டிங் தளமானாலும் எனக்கு ஒன்றுதான் என்பது போலத்தான் படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்டாராம். தனது முதல் இந்திப் படத்தை ரொம்பவே ரசித்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இந்தியா-ஆஸ்திரேலிய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு அன்இந்தியன் (Unindian) என்று தலைப்பிட்டுள்ளனர்.

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நேற்று நடந்த பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது இந்திய பாணி உடைகள் அணிந்து, ஹீரோயின் தனிஷ்தா சட்டர்ஜியுடன் குஷியாக நடனமாடி படக் குழுவினரை திக்குமுக்காடச் செய்தாராம்.

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

இது போதாதென்று தனி்ஷ்தாவிடம் 'என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...உங்கள விட நான் நல்லா ஆடறேன் இல்ல!' என்று கருத்து கேட்கவும் தவறவில்லை.

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

அன்இந்தியன் படம் முழுக்க முழுக்க காமெடிப்படமாக உருவாகியுள்ளது. சலீம் சுலைமான் இசை அமைக்க, அனுபமா சர்மா இயக்குகிறார்.

Post a Comment