அப்பாடக்கர் ஜெயம் ரவியின் பல்பு பாட்டு!

|

எத்தனையோ ஹீரோக்கள் பாடகர்களாக அவதாரம் எடுக்க, தானும் அந்த ரூட்டில் குதித்துவிட்டார் ஜெயம் ரவி.

சுராஜ் இயக்க, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள அப்பாடக்கர் படத்தில் பாடகராகிவிட்டார் ஜெயம் ரவி.

அப்பாடக்கர் ஜெயம் ரவியின் பல்பு பாட்டு!

இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளரான இமானை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு பாட வைத்தார்.

பிறகு சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ... ஹிட்டு சாங் மா நீ...' என தொடங்கும் குத்துப் பாடலை பாட வைத்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியையும் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

ஜெயம் ரவி இப்படத்தில் ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்...' எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடலை தேவா மற்றும் விவேக்குடன் இணைந்து பாடியுள்ளார் ஜெயம் ரவி. காமெடி கலந்த பொழுது போக்கு படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

 

Post a Comment