உத்தம வில்லன் வருதே... போட்டி ஹெவியா இருக்குமே என்று மே 15-க்குத் தள்ளிப் போனது சூர்யாவின் மாஸ்.
ஆனால் சோதனை பாருங்கள்... அந்தத் தேதியிலும் ஏக மோதல்கள்.
அன்றுதான் தன் படம் புறம்போக்கை வெளியிடுகிறார் ஜனநாதன். ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலேவும் அன்றுதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு படமும் அன்று களத்தில் குதிக்கிறது. அதுதான் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட்.
லஷ்மன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். டி இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்ட பணிகளையும் படக்குழுவினர் முடித்து விட்டனர். மே 15ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஆக மே 15- ம் தேதி 5 படங்கள் தயாராக நிற்கின்றன. கடைசி நேரத்தில் எந்தெந்த படங்கள் பின்வாங்கப் போகின்றனவோ!
Post a Comment