'தல' பிறந்தநாளில் ரிலீஸ் இல்லை: ஜகா வாங்கும் 'வா டீல்'

|

சென்னை: மே மாதம் 1ம் தேதி பல படங்கள் ரிலீஸ் ஆவதால் வா டீல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது என நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் சிவஞானம் இயக்கியுள்ள படம் வா டீல். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த வா டீல் படத்தை ஃபெதர் டச் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது.

இந்த படம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும் என்று அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி பல படங்கள் வெளியாக உள்ளன. இதனால் அருண் விஜய் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

காலை வணக்கம்! மே 1ம் தேதி பல படங்கள் ரிலீஸாவதால் வா டீல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment