சிம்பு- ஹன்சிகா நடித்த வாலு படத்துக்கு தமிழக அரசின் வரிச் சலுகை கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தை ஜூலை 3-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்துள்ள வாலு படம் நான்காண்டுகளாக வெளிவராமல் உள்ளது. பல முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு ரத்தாகிவிட்டன.
இப்போது படத்தின் வெளியீட்டு உரிமையை சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வாங்கியுள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தமிழகமெங்கும் இந்தப் படத்தை அவர் வெளியிடுகிறார்.
படத்தை தமிழக அரசின் வரிவிலக்கு குழுவுக்கு திரையிட்டுக் காட்டினார் ராஜேந்தர். அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில், வாலு படத்துக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது.
மேலும் படத்தின் புதிய ட்ரைலரை இந்த வாரம் வெளியிடப் போவதாகவும், வரும் ஜூலை 3-ம் தேதி படத்தை வெளியிடுவதாகவும் டி ராஜேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment