மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் பாலா

|

தன் மனைவி அம்ருதாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் பாலா.

தமிழில் 'அன்பு' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

Bala announces his divorce with wife Amritha

மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழும் பாலா, கடந்த ஆண்டு ரிலீசான 'வீரம்' படத்தில் அஜித் தம்பிகளுள் ஒருவராக நடித்தார்.

பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ருதாவுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. அம்ருதா மலையாள படஉலகில் பின்னணி பாடகியாகத் திகழ்கிறார்.

பாலா - அம்ருதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஆரம்பத்தில் இதுபற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமலிருந்த இருவரும், 'எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றி எதையும் வெளியிட வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மனைவியை பிரிந்து விட்டதாக பாலா இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் கூறும் போது என் மனைவியை நான் விவாகரத்து செய்யப்போகிறேன். இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்படும். பிரிவுக்கான காரணம் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்டவும் விரும்பவில்லை.

இந்த விவாகரத்து விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment