நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷாலை அழைத்துப்பேசும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க உள்ள நாடகக் கலைஞர்களைச் சந்தித்து சரத்குமாருக்கு ஆதரவு சேகரித்து வருகிறார்.
மதுரை நாடக நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "வருகிற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி நிச்சயம் வெற்றி பெறும். நடிகர் சங்கத்தில் சிலர் பிரச்னைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எந்தவொரு பிரச்னைகளையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். விஷால் பேசி வருவதை பார்த்தால் அவர் சொந்தமாகப் பேசுவதுபோல் தெரியவில்லை, யாரோ தூண்டிவிட்டு அவரை பேச வைப்பதாக தெரிகிறது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, விஷாலை அழைத்துப் பேசும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை," என்றார்.
Post a Comment