வேந்தர் மூவீஸின் பிரமாண்ட படத்தை இயக்கி நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்!

|

‘முனி', ‘காஞ்சனா' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி நடித்த, லாரன்ஸ் சமீபத்தில் ‘காஞ்சனா 2' படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பேய்ப் படமாக வெளியான ‘காஞ்சனா 2'வில் லாரன்சுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார்.

Raghava Lawrence to direct a movie for Vendhar Movies

முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என மூன்று தொடர் வெற்றிப் படங்களை இயக்கி நடித்த லாரன்ஸ், அடுத்து ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

அவரும் ரஜினியைச் சந்தித்து இரண்டு கதைகளைக் கூறினார். ஒன்று முனி மாதிரி பேய்ப்படம். இன்னொன்று பாட்ஷா மாதிரி ஆக்ஷன் படம். ஆனால் ரஜினி பின்னர் சொல்வதாகக் கூறி அனுப்பிவிட்டார்.

இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படம் பேய் படத்தில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. தற்போது கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

வேந்தர் மூவீஸ் மதன், டி சிவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் இந்தப் படத்தினை முறைப்படி நேற்று அறிவித்தனர்.

 

Post a Comment