அஜீத் நடிக்கும் 57வது படத்தை தான் இயக்கவிருந்ததாகவும், பின்னர் அஜீத் அந்த முடிவை கைவிட்டதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் அஜீத், அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன.
ஆனால் விஷ்ணுவர்தன் மீது அவர் மனைவி சில புகார்களை அஜீத்திடம் கூறியதாகவும் இதனால் கோபமடைந்த அஜீத், விஷ்ணுவர்தனுக்கு படம் பண்ணும் யோசனைக்கே தற்காலி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார் விஷ்ணுவர்தன்.
அவர் கூறுகையில், "அஜீத்தை வைத்து படம் இயக்க எனக்கும் ஆசைதான். அவருக்காக கதை தயார் செய்யவும் நான் ரெடியாகவே உள்ளேன்.
ஆனால் இப்போதைக்கு இருவரும் இணைந்து படம் பண்ணும் திட்டமே இல்லை.
நான் இப்போது யட்சன் படத்தில் பிஸியாக உள்ளேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment