சென்னை: இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எலியும், பூனையுமாக சண்டை போடுவார்கள். ஒருவரையொருவர் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கேவலமாக திட்டித் தீர்ப்பார்கள். ஆனால் விஜய் படம் ரிலீஸானால் அது வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்களும், தல படம் வெளியானால் தளபதி ரசிகர்களும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.
இந்நிலையில் வரும் 22ம் தேதி விஜய்யின் 41வது பிறந்தநாள் வருகிறது. விஜய் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் லண்டனில் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
வரும் 22ம் தேதி விஜய்யின் 41வது பிறந்தநாள் என்பதால் அன்று சென்னை கிங் மேக்கர்ஸ் தல அஜீத் குமார் ஃபேன்ஸ் கிளப் சார்பில் 41 பேர் ரத்ததானம் செய்ய உள்ளனர். அவர்கள் 41 மரக்கன்றுகளை நட உள்ளனர். இது தவிர 500 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்குவது உள்ளிட்ட பல நல்லகாரியங்களை செய்ய உள்ளனர்.
அண்மையில் கூட ட்விட்டரில் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதியநிலையில் தல ரசிகர்களின் இந்த முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது.
Post a Comment