பெரிய நடிகர்களின் படங்களின் கதைகள், அந்தப் படங்கள் உருவாகும் முன்பே லீக்காகிவிடுவது இப்போதைய ட்ரெண்ட். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதீத ஆர்வம்தான்.
புலி படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் பெரும் பட்ஜெட்டில் விஜய் நடிக்கிறார் அல்லவா... இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று இப்போதே கோடம்பாக்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே தெரிந்த சங்கதி.
அடுத்து படத்தின் கதை, விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது .
ஆனால் அதை ஒரு குற்றச்சாட்டாக யாரும் முன்வைக்க் கூடாது என்ற முன் ஜாக்கிரதையுடன், இந்தக் கதையை முறைப்படி உரிமை பெற்று, ரீமேக் செய்கிறார்கள் என தகவல் கசிந்துள்ளது.
அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணியே கிட்டத்தட்ட மவுன ராகம் கதையின் புது வடிவம்தான் என்பது நினைவிருக்கலாம். வரும் 26-ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாகத் தொடங்குகிறது இந்தப் படம்.
Post a Comment