பஜ்ரங்கி பாய்ஜானை பார்த்துவிட்டு குமுறிக் குமுறி அழுத சிறுமி: தீயாக பரவும் வீடியோ

|

மும்பை: பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை பார்த்த சிறுமி ஒருவர் சல்மான் கானின் கதாபாத்திரத்தை நினைத்து நினைத்து குமுறிக் குமுறி அழுத வீடியோவை இயக்குனர் கபீர் கான் வெளியிட்டுள்ளார்.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் கடந்த 17ம் தேதி ரிலீஸானது. படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். சல்மான் படங்களிலேயே இது தான் சிறந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

படத்தில் வாய் பேச முடியாதவராக வரும் சிறுமி ஹர்ஷாலி மல்ஹோத்ராவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் கபீர் கான் படம் பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் படத்தை பார்த்துவிட்டு இந்த சிறுமி அழுதுள்ளது மறக்க முடியாது என்று தெரிவித்து சிறுமி அழுதபோது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

சூசி என்ற சிறுமி பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை பார்த்து முடித்ததும் சல்மான் கான், சல்மான் கான் என்று கூறி அழத் துவங்கினார். அவரது தாய் சல்மான் கானுக்கு என்ன என்று கேட்டதற்கு ஐ லவ் சல்மான் கான் என்று அழுதபடியே கூறியுள்ளார்.

சல்மானின் கதாபாத்திரத்தை நினைத்து தான் சிறுமி அப்படி அழுத்துள்ளார்.

 

Post a Comment