பாகுபலி.. இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின், வெற்றியின் உச்சமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களை இப்போதிலிருந்தே தயார்ப்பாடுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
பாகுபலியின் முதல் பாகம் 'பாகுபலி - ஆரம்பம் (Bahubali - The Beginning)' என்று வெளியானது. அடுத்த பாகம் 'பாகுபலி - முடிவு (Bahubali - The Conclusion)' என்று வெளியாகவிருக்கிறது.
இந்த இரண்டாம் பாகத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் படத்தை விட முற்றிலும் புதிய போர்க்களம், எதிரிப்படைகள் இந்த இரண்டாம் பாகத்தில் இருப்பதை இந்தப் போஸ்டர் உறுதிப்படுத்துகிறது.
ஆக்ரோஷமான பிரபாஸ், தொப்பியும் இரும்புக் கவசங்களும் அணிந்த எதிரிப்படை வீரர்களை கோடரியால் துவம்சம் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரே படத்தின் பிரமாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு டீசருக்கு சமமாக இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
Post a Comment