'ப்ரூஸ் லீ' நாயகியாகிறார் நயன்தாரா?

|

சென்னை: பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' . இப்படம் வரும் செப்டம்பர் 17ம் தேதி ரிலீசாகிறது.

Nayanthara in G V Prakash's ‘Bruce Lee’

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் இயக்கத்தில் 'ப்ரூஸ் லீ', 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

ப்ரூஸ் லீ படத்தை இயக்கும் பிரசாந்த், இயக்குநர் பாண்டிராஜிடன் இணை இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுத, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் இப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டதாகவும், எனவே விரைவில் அவர் நாயகியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Post a Comment