நட்புப் படத்தின் தயாரிப்பாளரை சுற்றலில் விட்ட தளபதி நடிகர்

|

சென்னை: தளபதியான அந்த நடிகர் சில வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து மார்க்கெட் இறங்கிப் போயிருந்தபோது,சக நடிகர்களுடன் இணைந்து நட்பான படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் வெளியான ஒரிஜினல் படம் தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குனரால் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது, படம் ஓரளவு நன்றாக ஓடி நடிகரின் சரிந்த மார்க்கெட்டை சற்று நிமிர்த்திக் கொடுத்தது.

ஆனால் எல்லோருக்கும் நட்பான அந்தப் படம் தயாரிப்பாளர் தரப்பில் லாபத்தைக் கொடுப்பதற்கு பதிலாக நஷ்டத்தை அளித்து விட்டதாம். இதனைக் கேட்ட நடிகர் அடுத்து உங்கள் பேனரில் ஒரு படம் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம்.

இதனை நம்பிய தயாரிப்புத் தரப்பு சமீபத்தில் நடிகரை சந்திக்க நடிகரோ நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டாராம்.

அடுத்தவங்க படத்துக்கெல்லாம் நல்லது செய்றாரு சொந்தப் படத்துக்கு வந்த பிரச்சினையை தீர்த்து வைக்க மாட்டேன் என்கிறாரே, என்று சகட்டுமேனிக்கு தயாரிப்பாளர் தற்போது புலம்பி வருகிறாராம்.

 

Post a Comment