ஜின் என்ற பெயரில் தயாராகி வந்த படத்தை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அதனை டார்லிங் 2 என்ற தலைப்பில் வெளியிடுகிறார்.
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்' படம் மூலம் நடிகரானார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதில் ஜி.வி. பிரகாஷுடன் நிக்கி கல்ராணி, சிருஷ்டி டாங்கே, பாலா, கருணாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சாம் ஆண்டன் இயக்கியிருந்த இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வணிக ரீதியாக இப்படம் வெற்றியடைந்தது.
இந்த நிலையில் டார்லிங் 2 என்ற தலைப்பில் இன்னொரு படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார் ஞானவேல் ராஜா.
பொதுவாக முதல் படத்தின் தொடர்ச்சியாக அல்லது ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள படமாக இரண்டாம் பாகம் வரும்.
ஆனால் டார்லிங் 2 கதை வேறு.
இதில் நாயகர்களாக ரமீஸ் ராஜா, மெட்ராஸ் கலை நடிக்கிறார்கள். டாக்டர் மாயா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. இதுவும் பேய்ப் படம் என்பதைத் தவிர, டார்லிங்குக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனால் இந்தப் படத்தை வாங்கி டார்லிங் 2 என்று தலைப்பிட்டு வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா.
Post a Comment