சென்னை: மதுரையில் கமலைப் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் கமல் மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அவர் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் கமலை சிவகார்த்திகேயன் விமர்சனம் செய்ததாக கூறி இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகர் கமல் ஹசான் ஆகியோர் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
நடிகர் கமல் ஹாசன் கூறுகையில், "எனது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மையில்லை, தாக்குதல் நடந்தாக கூறப்படும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நானும் சிவகார்த்திகேயனும் மதுரையில் நிகழ்ச்சி முடிந்து ஒன்றாகத்தான் வருகிறோம்" என்றார்.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், "எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நலமாகத்தான் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment