சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை மதுரையில் வைத்து தாக்கியவர்கள் யார் என்று விசாரிக்குமாறு, நடிகர் கமல் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
நேற்று மதுரை விமான நிலையத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் வந்தபோது மதுரையைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் சிலர் அவரைத் தாக்க முயற்சித்தனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், நடிகர் கமல் குறித்து எதுவும் சொல்லாமல் ரஜினிதான் எனது ரோல்மாடல் என்று கூறியிருந்தார்.
கமல் நடித்த காக்கிச்சட்டை படத்தின் தலைப்பில் நடித்தது பற்றி ஒருவார்த்தை கூட சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொள்ளவில்லை.மேலும் கமல் குறித்து எதுவும் பேசவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் மதுரையில் நேற்று அவர்மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் கமலுடன், சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவரும் ஒன்றாகத் திரும்பியபோது நடந்த நிகழ்வுகள குறித்து கமல் அறிந்து கொண்டிருக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, சென்னை வந்ததும், மதுரையில் சிவகார்த்திகேயனைத் தாக்க முற்பட்டது யார்? என்பதை உடனடியாக விசாரித்து என்னிடம் சொல்லுங்கள் என்று கடுமையாக உத்தரவிட்டிருக்கிறாராம் கமல்.
அவருடைய ரசிகர்மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மேல் கமலே நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லுகிறார்கள்.
திரையுலகில் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இந்த விவகாரம்...
Post a Comment