"பாடிகார்டு"களுடன் திரியும் வாரிசு நடிகை

|

சென்னை: அந்த வாரிசு நடிகையின் பூர்வீகம் தமிழ் என்றாலும் அறிமுகமானது ஹிந்திப் படங்களில் தான். பாலிவுட்டில் நடிகை நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் நடித்த ஒரு சிலபடங்களிலேயே ஹிந்தி உலகின் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி முன்னணி நடிகையாக மாறிவிட்டார் நடிகை. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிகையின் ஆட்சி கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

முதலில் வீடு அடுத்து கார் தற்போது புரொடக்க்ஷன் கம்பெனி என்று நடிகை கலக்கிக் கொண்டிருக்கிறார். தெனிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகை கொடிகட்டிப் பறப்பதால் இவர் எங்கு சென்றாலும் இவரைப் பார்ப்பதற்காக பெரிய ரசிகர் பட்டாளமே கூடிவிடுகிறதாம்.

ஒருசில நேரங்களில் ரசிகர்கள் சிலரின் தொல்லைகளிலும் இவர் மாட்டி விடுகிறாராம். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தற்போது இவரை சுற்றி ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கியுள்ளாராம்.

நடிகை படப்பிடிப்பு தளம், கடை திறப்பு விழா என எங்கு சென்றாலும், இந்த பாதுகாப்பு படை அவரை சுற்றியே வலம் வருகிறதாம். நடிகையின் இந்த ஏற்பாட்டால் ரசிகர்கள் நடிகையைப் பார்த்தால் பத்தடி முதல் நூறடி வரை தள்ளிச்சென்று விடுகின்றனராம்.

நல்ல ஏற்பாடு தான்....

 

Post a Comment