பெரிய இழுபறிக்குப் பிறகு, விஜய் நடித்த புலி படம் இன்று வெளிநாடுகளிலும் ரிலீசானது.
பொதுவாக பெரிய படங்கள் இந்தியாவில் வெளியாவதற்கு முன் வெளிநாடுகளில் வெளியாகி விமர்சனங்களே வந்துவிடுவது இன்றைய நிலை. குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஒரு நாள் முன்பே வெளியாவது வழக்கம்.
விஜய்யின் புலி படமும் அப்படித்தான் வெளியாகும் என்ற நம்பிக்கையில் பலமான ஏற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள வெளியீட்டாளர்கள் செய்திருந்தனர்.
ஆனால் வருமான வரி சோதனை, கடைசி நேர நிதி நெருக்கடி போன்றவற்றால் படம் வெளியாவது தாமதமானது. இதனால் வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இன்று விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைகள், நிதி ஏற்பாடு காரணமாக காலையில் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டன.
புலி வெளியாகும் 10 நாடுகளுக்கும் க்யூபுக்கான கேடிஎம் அனுப்பப்பட்டுவிட்டது. திட்டமிட்டபடி இந்த நாடுகளில் புலி காட்சி ஆரம்பமாகிவிட்டது.
Post a Comment