தள்ளிப் போனது வேதாளம் டீசர்

|

சென்னை: அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வேதாளம் படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நேற்று படத்தின் டீசர் வெளியாகவில்லை.

இதனால் டீசர் வெளியாகும் என்று நள்ளிரவு வரை ஆவலுடன் காத்திருந்த அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

விஜயின் புலி படத்தின் 2 வது டிரெய்லர் வெளியான அன்று அஜீத் படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. இதனால் அஜீத் மற்றும் விஜயின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று விஜயின் புலி படத்துடன் அஜீத்தின் வேதாளம் பட டீசரும் வெளியாகும், என்று நேற்று காலையில் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.


ஆனால் வேதாளம் படத்திற்கு பாட்டெழுதிய கவிஞர் மதன் கார்க்கி "வேதாளம் படத்தின் டீசர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. இன்று இரவு டீசர் வெளியாகும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அஜீத் ரசிகர்கள் வேதாளம் படத்தின் டீசரை வரவேற்க நேற்று நள்ளிரவு வரை காத்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி நேற்று படத்தின் டீசர் வெளியாகவில்லை.

இதனால் தற்போது அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Post a Comment