நரேனின் கத்துக்குட்டி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

|

சென்னை: விஜயின் புலி படத்துடன் இன்று வெளியாகவிருந்த கத்துக்குட்டி திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் இன்று வெளியாகவிருந்த கத்துக்குட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

நரேன், சூரி இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்திருந்த கத்துக்குட்டி திரைப்படம் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

Kathukutti Movie Banned?

இந்தநிலையில் இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நிலா சாட்சி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர்கபீர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ‘ஓன் புரொடக்சன்' நிறுவனம் கத்துக்குட்டி என்ற படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக ‘ஓன் புரொடக்சன்' நிறுவனத்தின் உரிமையாளர் ராம்குமார், எங்கள் நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி பணத்தை எனக்கு தராமல், படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்' என்று கூறியிருந்தார்.

Kathukutti Movie Banned?

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கவேண்டிய பணத்தை ‘டெப்பாசிட்' செய்து விட்டால், படத்தை வெளியிடலாம். பணத்தை டெப்பாசிட் செய்யவில்லை என்றால், கத்துக்குட்டி படத்தை வெளியிடக்கூடாது. இந்த படத்தை வெளியிட 2 வாரத்துக்கு தடை விதிக்கின்றேன்' என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தற்போது கத்துக்குட்டி படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.

 

Post a Comment