புலி படத்தின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டதால், சற்று தாமதமாக இன்று வெளியானது.
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் அக்டோபர் முதல் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
படம் வெளியாக 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், புலி படத்தின் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் வீடுகள், அலுவலகங்களை வருமான வரித்துறை அதிரடியாக சோதனையிட்டது. நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்தது.
இந்த நிலையில் படத்தை க்யூபில் வெளியிடுவதற்கான கேடிஎம் எனப்படும் ரகசியக் குறியீடு யாருக்கும் வழங்கப்படவில்லை. கடைசி நேர நிதி நெருக்கடி, தயாரிப்பாளர்களால் எங்கும் நகர முடியாத சூழல் காரணமாக படத்தை வெளியிடுவது தாமதமானது.
இதனால் அதிகாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகின.
இந்த நிலையில் சிக்கல்களைக் களைய நேற்று மாலையிலிருந்தே திரையுலகின் பல்வேறு தரப்பினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, நடிகர் விஷால், நடிகர் சரத்குமார் உள்பட பலரும் ஜெமினி லேபில் படத்தின் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அனைத்து சிக்கல்களும் இன்று காலை தீர்க்கப்பட்டது.
திருச்சியில் புலி காட்சிகள் காலை 9 மணிக்கே தொடங்கிவிட்டது. சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் காலை 11 மணிக்கு காட்சிகள் தொடங்குகின்றன.
Post a Comment