மும்பை: திருமணம் என்பது நிரந்தரமான பந்தம் அல்ல என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் நடிகர் சல்மான் கான்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 49 வயது ஆகுகிறது. ஆனால் இன்னும் மனிதர் திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக சிங்கிளாக உள்ளார். அவரது தம்பிகள், தங்கைகளுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு திருமணமான கடைசி தங்கை அர்பிதா கூட தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் தான் சல்மான் தனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மானிடம் அவரின் திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில்,
திருமணம் என்பது தற்போது வாழ்நாள் பந்தம் இல்லை. காலம் மாறிவிட்டது. தற்போது தற்காலிக திருமணம் செய்து கொள்ளும் காலம். நீங்கள் என்னை நிரந்தரமாகவா அல்லது தற்காலிகமாக திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறீர்களா என்றார்.
இத்தனை நாட்களாக திருமணம் பற்றி கேட்டால் சிரித்து மழுப்பி வந்த அவர் தற்போது இப்படி ஒரு வில்லங்கமான பதிலை அளித்துள்ளார்.
Post a Comment