சென்னை: இன்று ரிலீசான புலியை சத்யம் சத்யம் செரீன் அரங்கில் பார்த்தோம்.. படத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள்...
Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!
- படம் முழுக்க விஜய்கெகன அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள்.
- பிரமாண்ட அரக்கனுடன் மோதும் காட்சி விஜய் ரசிகர்களுக்கு விருந்து.
- தீக்குழாய்க்குள் புகுந்து வெளியேறும் காட்சியில், அடுத்து என்ன என்ற ஆர்வம் வேலிடுகிறது.
- கரும்புலியோடு பாய்ந்து போடும் சண்டை ஆக்ரோஷம். கடைசியில் இந்தப் புலியிடம் அந்த கரும்புலி தோற்று ஓடுகிறது.
- ஹன்சிகா செம கியூட்டாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பாடல்கள். ஸ்ருதியை விட செமையாக இருக்கிறார்.
- குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி நிறைய காட்சிகள்.
- இடைவேளைக்குப் பிறகு இன்னொரு விஜய்.. நீண்ட கூந்தலுடன்.. அறிமுகமே அதிரடியாக இருக்கிறது.
- ஜிங்கிலியா பாட்டில் குள்ள மனிதராக வருகிறார் விஜய். ஸ்ருதியோடு செம ஆட்டம் போடுகிறார்.
- அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்புல். நாளை கூட டிக்கெட் இல்லை சத்யம் சினிமாஸ் அரங்குகளில்.
- திரண்டு வந்த விஜய் ரசிகர்கள் கூட்டத்தால் அந்தப் பகுதியே ட்ராபிக் ஜாம்.
- 'இந்தப் புலிவேந்தன் ஆளப் பிறந்தவன் இல்லை.. மக்கள் வாழப் பிறந்தவன்..' - விஜய்யின் பஞ்ச்களிலிருந்து ஒரு சாம்பிள்.
- பைனல் டச்... படத்தில் சர்வாதிகாரம் செய்து வரும் ராணி மனம் மாறி விஜய்யை அந்த நாட்டுக்கு அரசனாக்கிவிடுகிறார். அப்போது விஜய் சொல்கிறார்... 'நாட்டுக்கே ராஜாவானாலும் நான் உங்களில் ஒருத்தன்!'
-எப்பூடி!
Post a Comment