சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 87 வது பிறந்த நாளான இன்று, பிரபு குடும்பத்தினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ராம் குமார்,பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த பிரபு குடும்பத்தினர் சிலையை வணங்கி மரியாதை செலுத்தினர்.
சிவாஜி சிலைக்கு பிரபு குடும்பத்தினர் வந்த விபரம் தெரிந்ததும் அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இன்று சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து, தங்கள் மரியாதையை செலுத்தினர்.
முன்னதாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் "சிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக மாறியவர். தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். இவரைப் போன்று யாரும் இன்றுவரை உருவாகவில்லை, நான் அவரின் பேரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிவாஜியின் பிறந்தநாளை விக்ரம் பிரபு நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment