புலியில் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் சக்தி வாய்ந்த இனமாக வருகிறார்கள் வேதாளங்கள். படத்தின் முடிவில் ஹீரோ விஜய்யும் ஒரு வேதாளம் என்பது தெரிய வரும். இருந்தும் மனித இனத்தைக் காக்கும் வேதாளமாக விஜய் அவதாரமெடுப்பார்.
இந்த புலி படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியான போதுதான், அஜீத்தின் புதிய பட தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தலைப்பு: வேதாளம்.
அன்றைக்கு இந்தத் தலைப்பைப் பார்த்தவர்கள், இதென்ன இப்படி வைத்திருக்கிறார்களே என கமெண்ட் அடித்தனர். இப்போது புலி படம் பார்த்த பலரும், இந்தப் படத்தின் கதை அல்லது காட்சி தெரிந்துதான் அஜீத் தன் படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பைச் சூட்டினாரோ என முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் (படத்தின் முதல் காட்சியிலேயே வேதாளத்தின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்பது போல ஒரு காட்சி வைத்துள்ளனர்).
அஜீத் படத் தலைப்பு வெளியான போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்துக் கொண்டிருந்தனர். இப்போது புலியில் வரும் வேதாளத்தை அஜீத் ரசிகர்கள் ஓட்ட ஆரம்பித்துள்ளனர்.
இது எதில் போய் முடியப் போகிறதோ!
+ comments + 1 comments
mmmmm
Post a Comment