'நாடோடிகள்Õ படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார் அனன்யா. அதிக சம்பளம் கேட்கிறார். கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார் என்று பல புகார்கள் அவர் மீது கூறப்பட்டது. அதையெல்லாம் மறுத்து வந்த அனன்யா, நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொல்லி வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியம் சிவா இயக்கும் 'சீடன்Õ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது அவரைத் தேடி
வந்திருக்கிறது இந்தி பட வாய்ப்பு.ராம் கோபால் வர்மாவின் உதவியாளர், அஜீத். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் படம் இயக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் விஜய் ஹீரோவாக நடிப்பது பற்றி பேச்சு நடத்தி வருகிறார். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார்.
மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அசின், த்ரிஷா, பிரியாமணி, பத்மப்ரியாவை தொடர்ந்து பாலிவுட்டில் காலடி பதிக்கிறார் அனன்யா.

Source: Dinakaran
Post a Comment