தீ நகர் அகம் புறம்Õ பட இயக்குனர் திருமலை கூறியதாவது:பெரிய பட்ஜெட் படம் இயக்க சினிமாவுக்கு வந்தேன். முதல் படம் அப்படி அமையவில்லை. அடுத்த படம் டைரக்ஷனுடன் தயாரிப்பு என பொறுப்பு கூடிவிட்டது. மூன்றாவது படத்துக்கான கதை ரெடி செய்தபோது திருப்தியாக அமையவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர்கள், Ôரிஸ்க் வேண்டாம். ஹிட் படத்தை ரீமேக் செய்யலாம்Õ என்றார்கள். தெலுங்கில் ஹிட்டான 'பிளேடு பாபுஜிÕ படத்தை தமிழில் 'காசேதான் கடவுளடாÕ பெயரில் இயக்குகிறேன். இதில் பாண்டியராஜன், கருணாஸ், நளினி, பாண்டு, மனோபாலா, சத்யன் என தெரிந்த முகங்களாகவே 27 நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய வேண்டி இருந்தது.'அகம் புறம்Õ வில்லன் சரண் இதில் ஹீரோ. கதாநாயகி தேர்வில் குழப்பம் ஏற்பட்டது.
கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலே நடிகைகள் பந்தாவாக நடந்து கொள்கிறார்கள். சில பிரபல நடிகைகளை கேட்டேன். கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே 'மச்சக்காரன்Õ படத்தில் நடித்த காம்னா தெலுங்கில் நடித்து வருகிறார். அவர் மும்பையில் இருந்தார். போனில் பேசியபோது, நேரில் வரச் சொன்னார். வீட்டுக்கு சென்றதும் வாசலில் நின்று வரவேற்றார். கதை கேட்டவுடன் நடிக்க சம்மதித்தார். சம்பளத்தை பற்றி பேசவே இல்லை. நேரடியாக ஷூட்டிங் வந்துவிட்டார். இதை மற்ற நடிகைகள் கற்க வேண்டும். இவ்வாறு திருமலை கூறினார்.
Source: Dinakaran
Post a Comment