பிரபல ‘பான்ட்டஸி’ என்ற ஆண்களுக்கான இதழ் ஒன்று நடிகைகளில், பார்த்ததும் முத்தமிடத் தூண்டும் அழகி யார்? இப்படி ஒரு போட்டியை நடத்தியது. ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டது. இந்த கணக்கெடுப்பில் இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு கவர்ச்சியான, அசத்தலான தோற்றம் கொண்டவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதில் பிரபல இந்தி நடிகையான 28 வயது பிரியங்கா சோப்ரா அதிக வாக்குகளுடன் வென்றுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் 2-வது இடத்தையும், கரீனா கபூர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகை பிபாஷா பாசு 4-வது இடத்திலும், கத்ரினா கைப் 5-வது இடத்திலும், சோனம் கபூர் 6-வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7-வது இடத்திலும் உள்ளனர். தீபிகா படுகோனே, ஜெனிலியா டிசோசா முறையே 8வது மற்றும் 9வது இடம் பெற்றுள்ளனர். நம்ம ஊரு அசினுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. Source: Dinakaran
Post a Comment