சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாதஸ்வரம்' தொடரில் இன்று புதிய பாடல் ஒன்று ஒளிபரப்பாகிறது. திரு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், 'மெட்டி ஒலி' திருமுருகன் தயாரித்து, இயக்கி நடிக்கும் தொடர் 'நாதஸ்வரம்'. சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில், மவுலி, பூவிலங்கு மோகன், ஸ்ருத்திகா உட்பட பலர் நடிக்கின்றனர். 'மெட்டிஒலி' தொடரில் கதையோடு இணைந்த 'மனசே மனசே' பாடல் இடம் பெற்றது போல இத்தொடரில் 'முதன்முறை உன்னை பார்த்தேன்' என்ற பாடல் இன்று ஒளிபரப்பாகிறது. யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு சஞ்சீவ் ரத்தன் இசை அமைத்துள்ளார். இதையடுத்து புதன்கிழமை 'இது பகலா' என்ற இன்னொரு பாடல் இடம்பெறுகிறது. இதுபற்றி திருமுருகன் கூறும்போது, 'கதைக்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக இந்தப் பாடலை பயன்படுத்துகிறோம். இது, ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்' என்றார்.
Source: Dinakaran
Post a Comment