சிறுத்தையில் சிங்கம் சாயல் இல்லை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிறுத்தையில் சிங்கம் சாயல் இல்லை

12/20/2010 12:25:18 PM

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் 'சிறுத்தை'. கார்த்தி, தமன்னா நடிக்கிறார்கள். சிவா இயக்குகிறார். வித்யாசாகர் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. சூர்யா வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றுக் கொண்டார். படத்தின் இணைய தளத்தை இயக்குனர் லிங்குசாமி துவக்கி வைத்தார்.

விழாவில் கார்த்தி பேசியதாவது:

இது எனது கனவு படம். மாநகராட்சி பள்ளியில் செம்பு திருடும் திருடன், கடமையும் வீரமும் நேர்மையும் மிக்க போலீஸ் அதிகாரி என்ற இரு கேரக்டர்களில் நடிக்கிறேன். அண்ணன் சூர்யா 'காக்க காக்க' படத்திலும், 'சிங்கம்' படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரின் சாயல் எனக்குள் வந்து விடாமல் கவனமாக நடித்திருக்கிறேன். தமன்னாவுடன் நடிக்கும் இரண்டாவது படம். ஒரு ஜோடி, ரசிகர்கள் மனதுக்கு பிடித்து விட்டால் அவர்கள் படத்துக்குள் எளிதாக நுழைந்து விடுவார்கள் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் தமன்னா, இரண்டாவது படத்தில் அமைந்திருக்கிறார். இன்னொரு ஜோடி சந்தானம். அவருடன் இணைந்து இதுவரை இல்லாத அளவுக்கு காமெடியாக நடித்துள்ளேன். இவ்வாறு கார்த்தி கூறினார்.

விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், ஏ.ஜெகன்நாத், விஜய், ராஜேஷ், ஜெயம் ராஜா, பிரபுசாலமன், பார்த்திபன், தயாரிப்பாளர்கள் ரவீந்திரன், சுபாஷ் சந்திரபோஸ், அன்பு செழியன், பாடலாசிரியர் அறிவுமதி, கலை இயக்குனர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயக்குனர் சிவா வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நன்றி கூறினார். 


Source: Dinakaran
 

Post a Comment