க்ரிஷ்-3ல் மூன்று ஹிருத்திக் ரோஷன்

|

Tags:


bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

க்ரிஷ்-3ல் மூன்று ஹிருத்திக் ரோஷன்

5/19/2011 10:24:23 AM

“க்ரிஷ்” படத்தை தொடர்ந்து ராகேஷ் ரோஷன் இயக்கும் “க்ரிஷ்-3″ல் அப்பா, மகன், பேரன் என மூன்று ரோலில் நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன். கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த “க்ரிஷ்” படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ஹிருத்திக் அப்பா-மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா, ப்ரியங்கா சோப்ரா நடித்து இருந்தனர். ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட இப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வசூலில் சாதனையும் படைத்தது. இப்படத்தை ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “க்ரிஷ் – 3″ படத்தை எடுக்க இருக்கின்றனர். இப்படத்தை ராகேஷ் ரோஷனே தயாரித்து, இயக்குகிறார். ஹீரோவாக ஹிருத்திக்கும், அவருக்கு ஜோடியாக ப்ரியங்‌கா சோப்ராவுமே நடிக்கின்றனர். இவர்கள் தவிர முக்கிய ரோலில் மற்றொரு பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் நடிக்க இருக்கிறார்.

“க்ரிஷ்-3″ படமும், முந்தைய படமான “க்ரிஷ்” போன்று பலபடங்கு பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. அத்துடன் இந்தபடத்தில் ஹிருத்திக் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். முதல் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் வந்த ஹிருத்திக், க்ரிஷ்-3ல் அப்பா, மகன், பேரன் என மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 

Post a Comment