சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தை இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா பதவேற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ரஜினியை சந்தி்த்து உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.
Post a Comment