தள்ளிப் போனது சூர்யாவின் 7ஆம் அறிவு!
5/31/2011 10:50:19 AM
5/31/2011 10:50:19 AM
ஜூனில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் 7ஆம் அறிவு படம் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை ஜூலையில் திரைக்கு கொண்டுவர முருகதாஸும், தயாரிப்பாளர் உதயநிதியும் திட்டமிட்டனர். ஆனால் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் 7ஆம் அறிவு படம் ஜூலையில் திரைக்கு வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம் 7ஆம் அறிவு. மார்ஷியல் ஆர்ட்டை மையமாக வைத்து முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா சர்க்கஸ் கலைஞராக நடித்திருப்பதாகவும், இன்னொரு வேடம் சீக்ரெட் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Post a Comment