5/31/2011 11:38:35 AM
பொதுவாக ஷங்கர் பட ஷூட்டிங் என்றால் குறைந்தபட்சம் ஒரு வருஷமாவது நடக்கும். ஆனால் தற்போது ஷங்கர் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறது நண்பன் படத்தின் வேகம். 25ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் நண்பன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து அவசர அவசரமாக கோயம்புத்தூர் வந்தார் நடிகர் ஜீவா. அதேபோல் இலியானா. காய்ச்சலால் கோவாவில் சிகிச்சை பெற்று வந்த இவரும் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் வந்துள்ளார். நண்பனின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரின் வெப்பத்தை தாங்க முடியவில்லை என டுவிட்டரில் புலம்பியிருக்கிறார் இலியானா.
Post a Comment