ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த சிரஞ்சீவி!

|


சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் போனார் நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான சிரஞ்சீவி.

ரஜினியின் நீண்ட கால நண்பர் சிரஞ்சீவி. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி இப்போது சிங்கப்பூரிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

அவர் அடுத்த 15 தினங்களில் சென்னைக்கு வந்துவிடுவார் என்று கூறப்படும் நிலையில், அவரை சிங்கப்பூருக்கே சென்று நலம் விசாரித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

இரு தினங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்ற சிரஞ்சீவி, ரஜினி தங்கியுள்ள வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசியுள்ளார்.

ரஜினி நலமாக உள்ளதாகவும், விரைவில் சென்னைக்கு வர ஆர்வமாக உள்ளதாகவும் சிரஞ்சீவி தெரிவித்தார்.
 

Post a Comment