இன்னும் 10 பேரை மணக்கப் போகிறேன்-கேத்தி பிரைஸ் பலே பேட்டி


33 வயதான டிவி நடிகையும், மாடல் அழகியுமான கேத்தி பிரைஸ் 2 முறை கல்யாணம் செய்து 2 பேரையும் விவாகரத்து செய்தவர். முதலில் பீட்டர் ஆன்ட்ரேவை மணந்தார். அவர் மூலம் ஜூனியர் மற்றும் பிரின்ஸஸ் டியாமி என இரு குழந்தைகள் கிடைத்தன.

அடுத்து அலெக்ஸ் ரீடை மணந்தார். இவருடன் ஒரே ஒரு ஆண்டு மட்டும் குடித்தனம் நடத்தியவர் கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்தார்.

அப்புறம் அடுத்த திட்டம் என்ன என்று கேத்தியிடம் கேட்டால், எனக்கு நிறைய குழந்தைகள் வேண்டும், நிறைய குதிரைகள் வேண்டும், நிறைய கணவர்களும் வேண்டும். இன்னும் பத்து பேரையாவது மணப்பேன் என்று நினைக்கிறேன் என்கிறார் படு கூலாக.

அடேங்கப்பா, 'பிரைஸ்' ஜாஸ்தியாத்தான் இருக்கு!
 

தமிழுக்கு வருவாரா துங்காஸ்ரீ?


கன்னடத்தில் நடித்து வரும் நடிகை துங்காஸ்ரீ தமிழுக்கும் விரைவில் வருவார் என்று தெரிகிறது.

சின்னட தாலி என்ற படத்தில் நடித்தவர் துங்காஸ்ரீ. கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இவரை இப்போது தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனராம்.

வழக்கமான மசாலாக் கதையுடன் கூடிய படம்தான் இந்த சின்னட தாலி. வீட்டை விட்டு ஓடிப் போகும் பணக்கார வாலிபானும், ஏழைப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பிக்கின்றனர். அதன் பிறகு பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதிலிருந்து எப்படி மீளுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தில் துங்காஸ்ரீக்கு கவர்ச்சிக் காட்சிகள் நிறையவே. நடிப்பை விட இவருக்கு கவர்ச்சிதான் பொருத்தமாக வருவதாக விமர்சனங்களிலும் எழுதித் தள்ளியுள்ளனர். இதனால் கவர்ச்சிப் பாதையில் ராஜ நடை போட முடிவு செய்துள்ளார் துங்காஸ்ரீ என்கிறார்கள்.

இதை அறிந்த கோலிவுட்டினர் துங்காஸ்ரீயை இங்கு கூட்டி வந்து படம் எடுக்க முயற்சிகளில் இறங்கியுள்ளனராம். கன்னடத்தை விட தமிழில் நடித்தால் சீக்கிரமே கல்லா கட்டலாம் என்பதால் துங்காஸ்ரீயும் தமிழுக்கு வர சம்மதிப்பார் என்றே தெரிகிறது.

வாணிஸ்ரீ காலம் முதல் எத்தனையோ ஸ்ரீக்களைப் பார்த்த தமிழ் திரையுலகம், இந்த ஸ்திரீயையும் ஏற்காமலா போய் விடும்!
 

துபாயிலிருந்து திரும்பி மாயமான துணை நடிகை காதலர் வீட்டில் மீட்பு


சென்னை: சென்னை விமான நிலையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட துணை நடிகை, திருவான்மியூரில் காதலனின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாக்குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜா (35). சினிமா நடனக் கலைஞர். இவரது மனைவி மீனா (25) துணை நடிகை. இவர்களது மகன்கள் அஜீத் (8), ஆனந்த் (6). கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி, துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்காக, சில துணை நடிகைகளுடன் மீனாவும் ஒரு குழுவாக சென்றிருந்தார்.

துபாயில் 3 மாத கலை நிகழ்ச்சிகளை முடித்த குழுவினர், ஜூலை 22ம் தேதி பெங்களூர் வந்து இறங்கினர். அங்கிருந்து 23ம் தேதி காலை பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். மீனாவிற்காக விமான நிலையத்தில் காத்திருந்த ராஜா, மனைவியைக் காணாமல் திடுக்கிட்டு, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விமான நிலைய போலீசார் மீனாவின் மொபைல்போன் எண்ணை கண்காணித்தபோது, அவர் திருவான்மியூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ரியாஸ் என்ற உடற்பயிற்சியாளருடன் மீனா இருப்பது தெரிந்தது.

மீனாவிடம் நடத்திய விசாரணையில், என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டு தான் ரியாஸ் உடன் வந்தேன். ரியாஸூடனே வாழ விரும்புகிறேன், என்றார்.

இந்நிலையில், அவரது மகன்களை பார்த்த உடன் மனம் மாறிய மீனா, கணவருடன் வாழ சம்மதித்தார். ரியாஸ், மீனா ஆகியோருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
 

வேலூர் மாவட்டம் பூர்ணா!


இன்னும் ஒரு காவல்துறைக் கதைதான் வேலூர் மாவட்டம். அதேசமயம், காவல்துறையை தூக்கிப் பிடிக்கும் வகையிலான கதையுடன் கூடியதாக இந்தப் படம் அமைந்துள்ளதாம்.

மாசிலாமணி படத்தை இயக்கிய ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் நந்தா. அவருடன் டூயட் பாடி ஆடும் கேரக்டரில் தலை காட்டியுள்ளார் பூர்ணா. கைவசம் பெரிய அளவில் படம் இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் பூர்ணா இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளாராம்.

காமெடிக்கு சந்தானம், குணச்சித்திர வேடத்துக்கு ஸ்ரீமன் என படத்தில் முக்கியக் கலைஞர்கள் நிரம்பியுள்ளனர்.

காவல்துறை அதிகாரியாக வருகிறாராம் நந்தா. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்த பல ஹீரோக்களுக்கு அது பெரும் உயர்வைக் கொடுத்துள்ளது. அதே போல இந்தப் படமும், நந்தாவுக்கு பெரிய பிரேக் தரும் என்கிறார் இயக்குநர் மனோகர்.

படம் சிறப்பாக வர வேண்டும், கதையில் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக சில காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று அதன்படி திரைக்கதையை வடிவமைத்துள்ளாராம் மனோகர்.
 

மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு


மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து விட்ட டான்ஸ் டைரக்டர் பிரபுதேவா தனது காதலியான நடிகை நயனதாராவை மும்பையில் வைத்து மணம் புரிய திட்டமிட்டுள்ளாராம்.

சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் 'தொல்லையாக' அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பைக்கு ஷிப்ட் செய்துள்ளார்களாம்.

மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர்தான் பிரபுதேவாவுக்கு அட்வைஸ் கொடுத்தாராம். அங்கு வைத்தால்தான் இந்த மீடியா தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம்.

மனைவியாக ரமலத் நீடித்து வந்த நிலையில், நயனதாராவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பிரபுதேவா, கடும் கஷ்டப்பட்டு சமீபத்தில்தான் ரமலத்தை விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

சென்னை, ஹைதராபாத், கொச்சி என பல இடங்களை முதலில் பரிசீலித்தனர். இறுதியில், மும்பை என தற்போது தீர்மானித்துள்ளனர்.

மிக மிக நெருங்கிய உறவினர்கள், நட்பு வட்டாரத்தை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்.

நடிகர் சிம்பு, நடிகை மீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுப்பார்களா என்பது தெரியவில்லை!
 

வயித்தெரிச்சலில் வதந்தியைப் பரப்புகிறார்கள்: குத்து ரம்யா குமுறல்


கன்னடத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் குத்து ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பாந்தனா தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு கன்னட சினிமாவில் நம்பர் 1 நடிகை திவ்யா ஸ்பாந்தனா. அவர் சினிமாவில் மட்டுமல்ல பிரச்சனைகள் மற்றும் வதந்திகளில் சிக்குவதிலும் நம்பர் 1 தான்.

அண்மையில் தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் பெரிய பிரச்சனையாகி இறுதியில் கன்னட நடிகர் அம்பரீஷ் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.

திவ்யா நடித்து அன்மையில் வெளிவந்த ‘ஜானிமேரா நாம்', ‘சஞ்சு வெட்ஸ் கீதா' ஆகிய படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் திவ்யா தனது சம்பளத்தை ரூ. 27 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக உயர்த்திவிட்டார் என்று கூறப்படுகின்றது.

திவ்யாவுக்கு அடுத்தபடியாக சம்பளம் வாங்குபவர் பிரியாமணி. பூஜா காந்தி ரூ. 22லட்சமும், பாவனா ரூ. 15 லட்சமும் வாங்குகிறார்களாம்.

என்ன திவ்யா திடுதிப்புன்னு சம்பளத்தை உயர்த்திட்டீங்களாமே என்று கேட்டதற்கு,

நான் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை. முதலில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் நான் அடிக்கடி தகராறு செய்வதாக சொன்னார்கள். அடுத்து என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாய் பரப்பிவிட்டார்கள்.

அவர்கள் அத்தனை செய்தும் நான் வெற்றிகரமாகத் தான் உள்ளேன். நான் நடிக்கவிருக்கும் ‘காந்தி நகர மகாத்மே' இந்திய சினிமாக்களில் முக்கியமானது. அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் தான் சிலர் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

இதில் சில நடிகைகளுக்கும் பங்கு உள்ளது என்று எனக்கு தெரியும். விரைவில் அவர்களை சந்திப்பேன். என் மார்க்கெட்டுக்கு ஏற்பத் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார்.

கன்னடத்தில் நம்பர் 1 நடி்கையாக இருந்தாலும் தமிழில் இப்போது பெரிய அளவில் நடிப்பதில்லை திவ்யா என்கிற ரம்யா.
 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக தேவா நியமனம்: முதல்வர் உத்தரவு


சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவாவையும், உறுப்பினர்-செயலாளராக குமாரி சச்சுவையும் நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவாவையும், மன்றத்தின் புதிய உறுப்பினர்-செயலாளராக குமாரி பி.எஸ்.சச்சுவையும் நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

செக் மோசடி வழக்கில் நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!


மும்பை: ரூ.3கோடி செக்மோசடி செய்த வழக்கில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட 6 பேருக்கு கோர்ட் பிடிவாராண்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஓபராய் மல்டிமீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். நிறுவனத்தை உள் மற்றும் வெளிநாடுகளில் விரிவுப்படுத்துவதற்காக, மும்பைச் சேர்ந்த ஜவகர்லால் அகிச்சா என்ற பைனான்சியாரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.

பணத்தை திரும்ப செலுத்த கொடுக்கபட்ட செக் பணமில்லாமல் திரும்ப வந்தது. இதையடுத்து, விவேக் ஓபராய், அவரது தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட 6 பேர் மீது செக்மோசடி வழக்கு தொடுத்தார்.

மும்பை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் பெயில் இல்லாத பிடிவாராண்ட் பிறக்கப்பட்டது.
 

'சீப் பப்ளிசிட்டி'.... அடங்காத சோனா!


நமீதாவை கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்த ஆபாச வசனம் பேசியும் நடித்ததால், சமீபத்தில் நமீதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சோனா, மீண்டும் அவரைச் சீண்ட ஆரம்பித்துள்ளார்.

பப்ளிசிட்டி மோகம் எனக்கல்ல, நமீதாவுக்குதான் என்று அவர் கூறியுள்ளார்.

கோ படத்தில் நமீதாவை கிண்டலடிப்பது போலவும் மிக ஆபாசமாகவும் நடித்திருந்தார் குத்தாட்ட நடிகை சோனா.

இதுகுறித்து பின்னர் நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அவர் தன்மீது கோபமாக இருப்பதாகவும் தினமும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து விளம்பரம் தேடி வந்தார்.

ஆரம்பத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த நமீதா, சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில் சோனாவின் பேட்டியைப் படித்து மிகவும் கோபமடைந்தார். அந்தப் பேட்டியில் தன்னைப் பற்றி தேவையில்லாமல் சோனா அடித்த கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இதுதான் நேரம் பப்ளிசிட்டி தேட என முடிவு செய்துவிட்ட சோனா, முன்னைக் காட்டிலும் வேகமாக நமீதா பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

‘நமிதாவைப் பற்றி நான் சொன்ன அந்த எஸ்எம்எஸ் விவகாரம் ரொம்ப பழசு. அதுக்கு இத்தனை நாள் கழிச்சி, இப்போ ஏன் அவர் பதில் சொல்லணும். நமீதாவுக்குதான் பப்ளிசிட்டி ஆசை,' என்றெல்லாம் கூறியுள்ளார்.

இதுகுறித்து நமீதாவிடம் கேட்டபோது, "சோனா வேண்டுமென்றே இப்படிச் செய்து வருவதை மீடியாக்கள் புரிந்து கொண்டால் போதும். போயும் போயும் சோனாவை வைத்தா நான் பப்ளிசிட்டி தேடுவேன். இதைவிட ஜோக் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்பதை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள். இனி இதுபற்றிப் பேசவே வேண்டாம். அருவருப்பாக உள்ளது," என்றார்.
 

'கொழுக் மொழுக்' மதுஸ்ரீ... வழிவிடு கண்ணே வழிவிடு!


கோலிவுட் ரசிகர்களுக்குப் பிடித்த கொழுக் மொழுக் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு மதுஸ்ரீ.

வழிவிடு கண்ணே வழிவிடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குகிறார்கள் அலிகான் -கௌரிசங்கர் என்ற இரட்டையர். சார்லி, டி.பி. கஜேந்திரன் என உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

என்ன படம் இது.... எதற்காக இந்த டைட்டில்?

"மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியமானது தான். ஆனால் அதைவிட முக்கியமானது அன்பு. அந்த அன்பை நமக்கு முதலில் காட்டுபவள் தாய். அத்தகைய அன்பின் உருவமான தாயை வயதான காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அது தான் கதைக் களம்.

தாயை மதிக்காமல் திரிபவனின் கதி என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாக கூறியுள்ளோம். திரைக்கதை முற்றிலும் புதிய பாணியில் இருக்கும்," என்கிறார்கள் இயக்குநர்கள்.

சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் இசையை கேட்டார்களோ இல்லையோ... புது நாயகி மதுஸ்ரீயின் கவர்ச்சி விருந்தை கண்களால் பருகத் தவறவில்லை!
 

அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!


அஜித்குமார் நடிக்கும் 50-வது படமான மங்காத்தாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படப் பாடலான பல்லேலக்காவின் சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

மங்காத்தா பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபுவே லீக் செய்து பரபரப்பு கிளப்பி வருகிறார்.

காரணம் என்னவோ... எல்லாம் பப்ளிசிட்டிதான்!

அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் ரஜினியின் சிவாஜி படத்தில் இடம்பெறும் 'பல்லேலக்கா' பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு கூறுகையில், "ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்," என்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்!
 

மார்க்கெட் இல்லாத பரத்! - சிம்பு காட்டம்


மார்க்கெட் இல்லாத பரத் படத்தையெல்லாம் போஸ்டரில் போட முடியுமா என தாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் வானம். சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், பரத் கடுப்பாகி பேசி வருகிறார்.

"சிம்புவுக்கு சமமான ரோல் தருவதாகத்தான் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படத்தில் என்னை ஓரம் கட்டினர். போஸ்டரில் கூட என் படம் இல்லை," என வருத்தப்பட்டிருந்தார்.

இது சிம்புவை கடுப்பேற்றிவிட்டது. அவர் கூறுகையில், "இரு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் யாருக்கு மார்க்கெட் இருக்கிறதோ, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் விளம்பரம் செய்வார்கள். மார்க்கெட் இல்லாதவர்கள் படத்தைப் போட முடியுமா... பரத் கருத்து பற்றி எனக்கு கவலை இல்லை. நான் என் வேலைகளை செய்தபடி போய்க்கொண்டு இருக்கிறேன்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் கூறுகையில், "பரத்தை விட சிம்புக்கு மார்க்கெட் அதிகம். சிம்பு மெகா ஸ்டார். எனவே அவரை வைத்துதான் விளம்பரப்படுத்த முடியும். பரத் பேசும் கருத்துக்கள் தொழில் ரீதியாக தவறானவை. பரத் கேரக்டரில் நடிக்க முதலில் நகுலைத்தான் தேர்வு செய்தோம். சிம்புதான் பரத்துக்கு சிபாரிசு செய்தார்," என்றார்.
 

மார்க்கெட் குறைச்சாலும் மவுசு அப்படியேதான் இருக்கு!! - த்ரிஷா பெருமிதம்


நான் இன்றைக்கு நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் எனக்கான மவுசு எப்போதும்போலத்தான் உள்ளது என்கிறார் நடிகை த்ரிஷா.

திருமணம், ரகசிய நிச்சயதார்த்தம், படங்கள் தோல்வி என தொடர்ந்து வரும் செய்திகளால் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அவர் அஜீத்துடன் நடித்த மங்காத்தா வெளியாகிறது. இதனால் தனது செல்வாக்கு மீண்டும் பழைய உச்சத்தை தொடும் என நம்புகிறார் த்ரிஷா.

மங்காத்தா வெளியாவதையொட்டி அஜீத்தும் த்ரிஷாவும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அப்படி த்ரிஷா கொடுத்த பேட்டி இது:

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து...

அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.

மங்காத்தாவில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களாமே?

அதெல்லாம் இல்லை. இதில் நான் ஒரு அப்பாவிப் பெண். அதில் எனக்கும் அஜீத்துக்குமான காதலும் இருக்கும். கவர்ச்சி இருக்காது.

வேறு இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே?

காட்டா மிட்டாவுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.

தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையா?

என்னைப் பொறுத்த வரைபாலிவுட் வரை போவதே பெரிய ஸ்டெப்தான். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

மாதம் 30 நாட்களும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ரிலாக்ஸாக நடிக்க விரும்புகிறேன்.

முன்பு மாதிரி த்ரிஷா பரபரப்பாக இல்லையே... உங்கள் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா?

நான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை.

நிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் போட்டியாக யாரையாவது நினைத்தால்தானே இந்தப் பிரச்சினை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்குப் போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத் தான் போட்டியாக கருதுகிறேன். அப்படிப் பார்த்தால் இப்போது எனக்கு போட்டியே இல்லை. புதுமுகங்கள் வருகை என்பது இயல்பானது. பத்தாண்டுகளுக்கு முன் நானும் புது நடிகையே.
 

இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜாதான்! -இயக்குனர் பி.வாசு


சென்னை: இசை என்றால் என்றைக்கும் என்னைப் பொருத்தவரை இளையராஜாதான், என்றார் இயக்குநர் பி வாசு.

பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு முதல் இசை குறுந்தட்டை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பெற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா,நாயகி சதா,மற்றொரு நாயகி திவ்யா பத்மினி, இயக்குனர் வாசுவின் மகன் இளம் நடிகர் ஷ‌க்தி, நடிகர் எம் எஸ் பாஸ்கர், தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் இயக்குனர் பி.வாசு பேசுகையில், "ஒரு படத்திற்கு வியாபாரமும் விளம்பரமும் அவசியம். என்னுடைய ஹீரோ ஆர்.கே மிகவும் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்.

'வேலை கிடைச்சிடுச்சி' படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். நாயகன் ஆர்.கே கதைக்கேற்றெ வகையில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கார்த்திக் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அறிமுகம் செய்த‌ மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்கி பிறகு என் படத்தில் நடித்துள்ளார்.

ராஜாதான்...

நான் எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும் இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜாதான். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இளையாராஜா பாணியில் ஒரு மெலடி பாட்டு போட்டிருக்கிறார். சின்னதம்பியில் இளையாராஜா போட்டுத் தந்த 'போவோமா ஊர்கோலம்...' மாதிரி இந்த பாட்டும் ஹிட்டாகும். மற்றபடி படங்க‌ளை போலவே எல்லா வகையான பாடல்களும் இதில் உள்ளன," என்றார்.

நாயகி சதா பேசும் போது இயக்குனர் பி.வாசுவின் படத்தில் நடிக்க வேண்டும் எனப்து தனது விருப்பம். ஆனால் ஒரு மூறை வாய்ப்பு வந்தும் அது நழுவி போய்விட்டது. இப்போது புலிவேஷம் படம் மூலம் அந்த ஆசை நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

மற்றொரு நாயகி திவ்யா பத்மினி பேசும் போது இளம் நடிகையான தனக்கு இயக்குனர் வாசு மிகவும் ஆழமான பாத்திரம் தந்துள்ளார் என்று நன்றியோடு கூறினார்.

இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசும் போது, "இயக்குனர் பி வாசு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தந்து நீண்ட நாள் கனவு" என்று கூறினார்.

"பி.வாசு படங்களில் இளையராஜா சார் பாடல்கள் மிக விஷேசமாக இருக்கும். இதைப் பார்க்கும்போது, நாமும் வாசு சாரின் ஒரு படத்துக்கு இசையமைக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன். அந்தக் கனவு புலிவேஷம் மூலம் நிறைவேறிவிட்டது. வழக்க்கமாக ஸ்ரீ காந்த் தேவா என்றால் குத்துபாட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால் புலிவேஷத்தில் என்னுடைய மெலோடி பாட்டு பேசப்படும்" என்றார் ஸ்ரீகாந்த் தேவா.

ந‌டிகனாக அல்லாமல் அப்பவின் ரசிகனாக வ‌ந்திருக்கிறேன் என்று இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷ‌க்தி. அவன் இவனில் வில்லனாக நடித்த ஆர்.கேவின் நடிப்பை பாராட்டிய ஷ‌க்தி அந்த படத்தில் அவர் ராவணன் என்றால் இதில் கர்ணன் என்று பாராட்டு தெரிவித்தார்.

தயாரிப்பாளரும் நாயகனுமான ஆர்.கே .ந‌னறி கூறினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்ட ஸ்குவாஷ் வீராங்கனை, "இது தான் பங்கேற்கும் முதல் திரைப்பட நிகழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக மகிழ்ச்சியடைவதாக" தெரிவித்தார்.
 

ராசு மதுரவன் தந்த ரூ.75 லட்சம் மோசடி புகார்: சக்சேனா மீது புதிய வழக்கு


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது இன்னுமொரு புதிய புகார் போடப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் மோசடி புகாரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா மீது போலீசார் 5 மோசடி வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரது உதவியாளர் அய்யப்பனும் அதே வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதலில் சென்னை கே.கே.நகர் போலீசில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் சக்சேனாவுக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த வழக்குகளை புகார்தாரர் கேட்டுக்கொண்டதன்பேரில் ரத்து செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தற்போது சக்சேனா, அய்யப்பன் ஆகிய இருவர் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராசு மதுரவன் புதிய வழக்கு

இந்த நிலையில், 'முத்துக்கு முத்தாக' படத்தின் தயாரிப்பாளர் ராசு மதுரவன், பட்டினப்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'முத்துக்கு முத்தாக' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ரூ.1.25 கோடிக்கு வாங்கினார்கள் என்றும், ரூ.50 லட்சம் மட்டும் தந்துவிட்டு, மீதி ரூ.75 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் அவர்கள் இருவரும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சக்சேனாவின் வங்கி கணக்கையும் முடக்கி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

கிசு கிசு - நடிகைகள் மோதல்... யோசனையில் இயக்கம்...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகைகள் மோதல்... யோசனையில் இயக்கம்...

7/28/2011 3:45:08 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

நமீ நடிகைக்கும் சோன நடிகைக்கும் இடையே கோல்ட் வார் ஆரம்பிச்சிருக்கு... ஆரம்பிச்சிருக்கு... சமீபத்துல சோன நடிகையை நமீ தாக்கியிருந்தாரு. ரெண்டு பேரும் பப்ளிசிட்டிக¢காக இப்படி பண்றதா கோடம்பாக்கத்துல பேசிக்கிட்டாங்க. இதனால சோன நடிகை உர்ராகியிருக்காராம். Ôநமீயை பற்றி நான் சொன¢ன அந்த எஸ்எம்எஸ் விவகாரம் ரொம்ப பழசு. அதுக்கு இத்தனை நாள் கழிச்சி, இப்போ ஏன் அவர் பதில் சொல்லணும். பப்ளிசிட்டி ஆசை நமீக்குதான். எனக்கு கிடையாதுÕனு பதிலடி தர்றாராம்... தர்றாராம்...

இளைஞன் இளைஞி படத்துல நடிச்சிருக்காரு மலையாள ரீம நடிகை. தன்னோட அடுத்த படத்துக்காக கவுதமரு நடிகைகிட்ட பேசினாராம்... பேசினாராம்... டெஸ்ட் ஷூட்டும் நடத்தினாராம்... நடத்தினாராம்... இது நடந்து ஒரு மாசமாகியும் இயக்குனர் தரப்பிலேருந்து பதில் இல்லையாம். இதனால நடிகை வருத்தமா இருக்காராம்... இருக்காராம்...

சரண இயக்கம் இந்தி பக்கம் போயி வாய்ப்பு தேடினாரு. ஏமாற்றம்தான் கிடைச்சது. அடுத்ததா டோலிவுட்டுக்கு போனாரு. அவர் சொன்ன கதையை தெலுங்கு ஹீரோ ரிஜெக்ட் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... திரும்ப கோடம்பாக¢கத்துக்கே வந்தவரு என்ன பண்ணலாம்னு யோசனையில மூழ்கியிருக்காராம்... மூழ்கியிருக்காராம்...




 

அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்

7/28/2011 3:42:53 PM

'ராணா பட ஷூட்டிங் அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள இப்பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கடந்த ஏப்.29ம் தேதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக போரூரிலுள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜினி.  சிகிச்சை முடிந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார். டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் 'ராணா பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் ரவிகுமாரும் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 3ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரமாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியுடன் பட ஹீரோயின் தீபிகா படுகோன், கஞ்சா கறுப்பு, சோனு சூட் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சண்டை காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டியுள்ளதால் அவரது உடல்நலம் கருதி ரிஸ்க்கான காட்சிகளை கிராபிக்ஸில் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் பாடல் பதிவு பணியில் ஏ.ஆர்.ரகுமான் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 4 பாடல்கள் தயாராகிவிட்டதாக ரகுமான் தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்கு முன்பும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சென்று தரிசனம் செய்வது ரஜினியின் வழக்கம். ஷூட்டிங் தொடங்கும் முன் அவர் திருப்பதி செல்கிறார்.




 

இருட்டடிப்பு செய்த இயக்குனர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இருட்டடிப்பு செய்த இயக்குனர்கள்

7/29/2011 3:01:56 PM

மம்தா கூறியது: மகிழ் திருமேனி இயக்கும் 'தடையறத் தாக்கÕ படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறேன். இதில் ஏற்கனவே பிராச்சி தேசாய் நடிப்பதாக இருந்தது. அவர் விலகிவிட்டார். அவர் ஏன் விலகினார் என்பது எனக்கு தெரியாது. இப்படத்தில் ஹீரோயினாக யாரை போடலாம் என்று யோசித்தபோதே என் பெயரையும் பரிசீலித்ததாக கூறினார் இயக்குனர். மலையாள படம் ஒன்றில் நடித்து வந்தேன். அதன் ஷூட்டிங் ஒரு மாதம் தள்ளிப்போனதால் உடனடியாக கால்ஷீட் தர முடிந்தது. தமிழ் படங்களில் நடிப்பதை நான் நிறுத்திவிட்டதாக புரளி கிளப்பி இருக்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏற்கனவே 'சிவப்பதிகாரம்Õ, 'குரு என் ஆளுÕ படத்தில் நடித்திருக்கிறேன். பிரபல ஹீரோக்களுடன்தான் ஜோடியாக நடித்தேன். ஆனால் அப்படத்தின் போஸ்டர்களில் என் போட்டோவை போடாமல் இயக்குனர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். சிலர் இதைக் கூறிய பின்தான் எனக்கே தெரிந்தது. அது வருத்தம் அளித்தது. மேலும் என்னை வழிநடத்துவதாக கூறி, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள். அது பற்ற¤ பேச விரும்பவில்லை.




 

கௌதம் மேனனின் ""யோஹன் : அத்தியாயம் ஒன்று''-அஜீத்துக்கான கதையில் விஜய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனனின் ''யோஹன் : அத்தியாயம் ஒன்று''-அஜீத்துக்கான கதையில் விஜய்!

7/29/2011 12:31:04 PM

முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காபினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை தமது போட்டோன் கதாஸ் நிறுவனம் சார்பில் கௌதம் வாசுதேவ் மேனனே தயாரிக்கிறார்.

அஜித்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கௌதம். படத்தின் தலைப்பை 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என மாற்றி உள்ளார் கௌதம்.  அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின் சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம் சொல்லியிருந்தார். இப்போது அஜீத்துக்கான கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த 2012யில் துவங்குகிறது.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸூடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'உதயன்' பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

கௌதம் மேனனின் ''யோஹன் : அத்தியாயம் ஒன்று''-அஜீத்துக்கான கதையில் விஜய்!




 

கொல்கத்தா காளி கோயிலில் பிரபுதேவா ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கொல்கத்தா காளி கோயிலில் பிரபுதேவா ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு

7/29/2011 3:02:57 PM

கொல்கத்தா காளி கோயிலில் பிரபு தேவா படத்துக்கு ஷூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கும் புதிய படம் 'வெடி'. விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்துக்காக கொல்கத்தாவில் உள்ள பிரபல தட்சிணேஸ்வரம் காளி கோயிலில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு முன்னதாகவே கடிதம் கொடுத்திருந்தனர். நேற்று முன்தினம் நடிகர், நடிகைகளுடன் பட யூனிட் கோயில் முன்பு போய் இறங்கியது. அவர்களை காவலாளிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். 'ஏற்கனவே அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்துவிட்டோம்' பட குழுவினர் கூறினர். விண்ணப்பம் முழுமையாக இல்லாததால், ஷூட்டிங் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் வரை பட குழுவினர் காத்திருந்தும் அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் புறப்பட்டனர். நாளை மறுநாள் பூங்கா ஒன்றில் ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றிருந்தனர். அங்கு சென்று ஷூட்டிங்கை நடத்தினர். ஷூட்டிங் ரத்து, லொகேஷன் மாற்றம் போன்றவற்றுக்கு ரூ.5 லட்சம் செலவானதாக பட குழு மேனேஜர் தெரிவித்தார். இதுபற்றி சமீரா ரெட்டி கூறும்போது, 'எல்லோரும் ஷூட்டிங்கில் பங்கேற்றும் எண்ணத்துடன் கோயில் முன்பு கூடினோம். எதிர்பாராத விதமாக அனுமதி மறுக்கப்பட்டதால் பாதி நாள் வீணானது. ஆனாலும் காளி தேவியை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது' என்றார். 'பட குழு சார்பில் கடந்த 21ம் தேதி விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. அது முழுமையாக இல்லை. எவ்வளவு நேரம் ஷூட்டிங் நடக்கும், வியாபார நோக்கத்துக்காக ஷூட்டிங் நடக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. சம்பவத்துக்கு பிறகு புதிய விண்ணப்பம் கொடுத்தனர். ஆனால் அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் தேவை' என்று கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.




 

பிரபாகரன் படபிடிப்பு-பிரபுதேவாவுடன் கொல்கத்தாவில் சமீரா ரெட்டி முகாம்!


டான்ஸ் டைரக்டர் பிரபுதேவாவின் பிரபாகரன் படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறதாம். இதற்காக நடிகை சமீரா ரெட்டி கொல்கத்தா சென்றுள்ளாராம். இதை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் பிரபாகரன். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான சவுரியம் படத்தின் ரீமேக் தான் பிரபாகரன்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் நாயகி சமீரா ரெட்டி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் பாடல் படபிடிப்பு. அருமையான தட்ப வெட்பம். இயக்குனர் பிரபுதேவாவின் படத்திற்காக டான்ஸ் ஆடுகிறேன் என்றார்.

நல்லா ஆடுங்க!
 

சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆக. 1க்கு ஒத்திவைப்பு


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்லக்கோட்டை என்ற திரைப்படத்தைத் தயாரித்த ராஜா என்பவர் சக்சேனா மீது பண மோசடிப் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சக்சேனாவின் வக்கீல் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 

பிளேபாய் தந்த ரூ 7.5 கோடி 'டாப்லஸ் ஆஃபர்': மறுத்தார் தீபிகா


பாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்... எதற்காக தெரியுமா... அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.

ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.

இப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல... உலகப் புகழ்பெற்ற பிளேபா.் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக... அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.

பிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.
 

சக்சேனாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனாவின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர் தமிழக போலீசார்.

சேலத்தைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் செல்வராஜ், சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. தொடர்ந்து அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்பட்டன. இவற்றில் சேலம் விநியோகஸ்தர்கள் கொடுத்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

மீதி 4 வழக்குகளில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், சக்சேனா மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வந்ததும், அந்த நிறுவன கணக்கில் லட்சக் கணக்கில் பணம் டெபாசிட் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. வங்கியில் மனைவி, மகள் பெயரில் டெபாசிட் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளதாம். மொத்தம் ரூ 50 லட்சம் வரகை இப்படி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக்த தெரிகிறது.

இந்த வங்கி கணக்கை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சக்சேனா வேறு எந்த நிறுவனத்திலாவது பணம் முதலீடு செய்துள்ளாரா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
 

நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்


தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.

பிரபுதேவாவை கள்ளத்தனமாக காதலித்து, அவரை அவரது மனைவியிடமிருந்து வெற்றிகரமாக, சட்டப்பூர்வமாக பிரித்து விட்ட நயனதாரா விரைவில் பிரபுதேவாவைக் கல்யாணம் செய்யவுள்ளார்.

இந்தநிலையில் அவர் கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். கடும் எதிர்ப்புகளையும் மீறி இப்படத்தில் நடித்தார் நயனதாரா. இப்படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடித்துள்ளார் என்பதுதான் வேடிக்கையாகும்.

இப்படத்தில் நடித்த காலத்தில் அசைவ உணவுகளை தொடாமல் சைவப் பட்சியாக இருந்தாராம் நயனதாரா. இயக்குநர் பாபு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த விரதத்தை அவர் கடைப்பிடித்தாராம்.

ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். லவ குசா என்ற என்.டி.ராமாராவ் நடித்த படத்தின் ரீமேக்தான் இது.

படப்பிடிப்பின்போது அவர் காட்டிய ஒத்துழைப்பும், சின்சியாரிட்டியும் அனைவரையும் கவர்ந்து விட்டதாம். இருப்பினும் இயக்குநர் பாபுவுக்கு ஒரு விஷயம் மட்டும் இடித்துள்ளது. அது நயனதாராவின் உதட்டோர மச்சம். கீழ் உதட்டில் உள்ள அந்த மச்சம், நயனதாராவின் முகத்தை படு கவர்ச்சியாக, செக்ஸ் அப்பீலுடன் காட்டுவதாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.

சீதை வேடத்தில் நயனதாரா கன கச்சிதமாக பொருந்தியிருந்தபோதிலும், அவரது உதட்டு மச்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டுவதாக உணர்ந்த அவர், அதை மறைத்துக் கொண்டு நடிக்க முடியுமா என்று நயனதாராவிடம் கேட்டார்.

ஆனால் அதற்கு நயனதாரா மறுத்துள்ளார். அது எனக்கு சென்டிமென்ட்டான மச்சம். எனவே அதை தயவு செய்து மறைக்க வேண்டும் என்று கேட்காதீ்ர்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து மச்சத்துடன் படத்தை எடுத்து முடித்த பாபு, தற்போது கிராபிக்ஸ் உதவியுடன் மச்சத்தை மறைத்து விட்டாராம்.

என்னா ஒரு டெக்னாலஜி!
 

துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்?


துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயமாகி விட்டார். கேரள தொழில் அதிபருடன் அவர் ஓடிவிட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்த ராஜா ஒரு புகார் மனு அளித்தார். அதில், "என்னுடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.

அவர் கடந்த 24-4-2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் கடந்த 23-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையில், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் மீனாவுடன் பழகி உள்ளார். அவரும் மீனாவுடன் சென்னை வந்தாராம். இதனால் மீனா கேரளா தொழில் அதிபருடன் சென்று விட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
 

எனக்கு பயமில்லை... சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! - அஜீத்


எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபதில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா சிக்கலில் இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டார்.

இப்போது இன்னொரு பேட்டியில், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்தனர். அதை பயமின்றி சுட்டிக் காட்டினேன். காரணம் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், முதல்வர் விழாவுக்கு மிரட்டி அழைக்கிறார்கள், இது நியாயமா என்று கேட்டார். உடனே ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆதரவைத் தெரிவித்தார்.

இதற்கு பிறகு, அப்படி பேசியதற்காக முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்பது வேறுவிஷயம்.

ஆனால் அவரது இந்த பேச்சுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவர்களே அஜீத்தை தாறுமாறாக விமர்சித்தனர். இதனால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்தார். ஜெயலலிதாவைவும் சந்தித்தார்.

இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளரான அஜீத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்த நிலையில்தான் அஜீத்தின் பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் அஜீத் கூறியிருப்பதாவது:

நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அதனால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன்.

என்னை எதிர்க்கும் அந்த சில நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் இறங்குகின்றனர். என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சினிமாவில் அரசியல் வேண்டாம்

நான் வெளியாட்களைப் பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.

நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும்.

மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்."
 

சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!


இரண்டு நாயகர்கள் நடிக்கும் படங்களின் ஆரம்பம் இனிப்பாக இருக்கும்... முடியும்போது மகா கசப்பான அனுபவங்கள் மிஞ்சும் என்பார்கள்.

அதனால்தான் ரஜினி - கமலுக்குப் பிறகு இரட்டை நாயகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வராமலே போயின. அவ்வளவு பெரிய நடிகர்களே எந்த ஈகோவுமில்லாமல் நடித்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தனர்.

ஆனால் இன்று பெரிதாக வாய்ப்பில்லாத சில நடிகர்கள்கூட ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததும், பிணக்கு வந்து மீடியாவிடம் முணக ஆரம்பிக்கிறார்கள்.

சமீபத்தில் சிம்பு நடிக்கும் வானம் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தார் பரத். படத்தின் அறிமுக பிரஸ் மீட்டில் இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தார்கள். சிம்புவுக்கு இணையான ரோல் பரத்துக்கு என்று இயக்குநர் வேறு கூறினார்.

படம் வந்தது. பரத்துக்கு என்ன ரோல் என்பது தெரிந்தும் போனது.

இப்போது பரத் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

"இந்தப் படத்தில் எனக்கும் சிம்புவுக்கும் சரிக்கு சரியான வேடம் என்று ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படம் முடியும் நேரத்தில் எனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ரிலீஸின்போது, நான் படத்தில் இருப்பதே தெரியாத அளவுக்கு என்னை மறைத்து, ஒருவருக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். எவ்வளவு பெரிய அவமானம், கொடுமை இதெல்லாம். இனி இந்தமாதிரி வாய்ப்புகளை ஏற்கும் முன் யோசிப்பேன்," என்கிறார் பரத்.

இது குறித்து விசாரித்தபோது, "அட போங்க... 'ரோலை'க் குறைத்தாலும் 'பே ரோலில்' கரெக்டாக இருந்தார்களல்லவா.... அதற்காக பரத் சந்தோஷப்பட வேண்டும். இன்றைய மார்க்கெட்டில் அவர் நிலை அதுதான்," என்கிறார் வானம் யூனிட் கலைஞர் ஒருவர்!
 

யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!


நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!
 

தனுஷ் நாயகி: ஸ்ருதிக்கு பதில் அமலா பால்?


ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலுடன் பேச்சு நடக்கிறது.

கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து புதிய படம் இயக்குறார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் படம் குறித்த செய்திகள் காற்றுவாக்கில் பரவி வருகின்றன.

இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்தான். அவர் தேதி கொடுத்ததை சில ஆங்கில பத்திரிகைகளுக்கு தெரிவித்துமிருந்தார் ஐஸ்வர்யா.

ஆனால் தெலுங்கில் நிறைய கமிட்மெண்டுகள் இருப்பதால் இப்போதைக்கு இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள முடியாது என இப்போது கூறிவிட்டாராம் ஸ்ருதி.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இப்போதைய சென்சேஷனான அமலா பாலிடம் ஐஸ்வர்யா பேசி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமலா பால் கூறுகையில், "தனுஷ் படத்துக்கு என்னிடம் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. உறுதியானதும் நானே பேசுவேன்," என்றார்.
 

அழகு, அழகு, சஞ்சய் தத் குழந்தைகள் கொள்ளை அழகு: ஷாருக் கான்


சஞ்சய் தத்தின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஷாருக் கான், கௌரி தம்பதிக்கு ஆர்யன்(14) என்ற மகனும், சுஹானா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஷாருக் சக நடிகர் சஞ்சயத் தத் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு சஞ்சய் தத், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த ஷாருக்கின் டுவீட்:

சஞ்சு பாபாவுடன் இரவு விருந்து சாப்பிட்டேன். சஞ்சய், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். மாஷா அல்லாஹ் என்று கூறியுள்ளார்.

சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். அதில் ஆண் குழந்தைக்கு ஷாஹ்ரான் என்றும், பெண் குழந்தைக்கு இக்ரா என்றும் பெயரிட்டுள்ளனர்.
 

நயன்தாரா இடம் எனக்கு வேண்டாம்! - மேக்னா


என்னைப் பார்க்கும் எல்லோரும் நான் நயன்தாரா மாதிரி இருப்பதாகக் கூறுகிறார்கள். நயன்தாரா இடம் உனக்குத்தான் என்கிறார்கள். எனக்கு நயன்தாரா இடம் வேண்டாம். எனக்கென தனி இடம் உள்ளது, என்கிறார் மேக்னா.

காதல் சொல்ல வந்தேன் மூலம் நல்ல நடிகையாக பெயர் வாங்கிய மேக்னா ராஜ், இப்போது 'உயர்திரு 420' படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அறிமுகமாகியும் பெரிய வாய்ப்பு அமையாததில் வருத்தமா?

இந்தக் கேள்விக்கு மேக்னா பதிலளிக்கையில், "மலையாளத்தில் நல்ல படங்கள் கிடைத்தன. ஸ்டார் பட வாய்ப்புகளால் மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் சூப்பர் ஹிட். தமிழில் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் 'உயர்திரு 420' பட வாய்ப்பு கிடைத்தது.

கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்திய படங்களின் எந்த சாயலும் இல்லாத ஒரு திரைக்கதை. இனி நல்ல நல்ல வாய்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

அடுத்த நயன்தாரா நீங்கதானா?

"நான் நயன்தாரா போல் இருப்பதாக நிறைய பேர் சொல்லுகிறார்கள். மீடியாக்களும் என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுகின்றன. நயன்தாரா இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நயன்தாராவின் நடிப்பு எனக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால், எனக்கான இடம் அவருடையது அல்ல. எனக்கென தனி இடம் இருக்கிறது. அதற்கு என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன். நயன்தாராவின் திருமணம் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயமும் கூட,'' என்றார்.
 

சினிமா டிக்கெட் கட்டணம் குறையுமா? - இன்று தெரியும்!!


சென்னை: தமிழக திரையரங்குகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், குறிப்பாக இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று அவசர கூட்டம் கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர் சங்க நிர்வாகிகள்.

சினிமா தியேட்டர்களில், டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் குறைப்பட்டு வருகிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க அரசு முயன்றும் முடியாமல் போனதற்குக் காரணமே, அதற்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவுதான்.

பெரிய பட்ஜெட் படங்கள், மற்றும் பண்டிகை கால படங்கள் திரைக்கு வரும் போது, நகர்ப்புற தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை கணிசமாக உயர்த்தி விடுகிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.

இதனால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளிலேயே அமர்ந்து டிவிடிகளில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ரூ 20க்கு டிவிடியை வாங்கி குடும்பத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கு பழகிவிட்டார்கள் மக்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அதில், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அப்படி குறைக்காத தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்

இதேபோல் நடிகர்-நடிகைகளின் சம்பளத்தையும் குறைக்க வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், நடிகர்-நடிகைகளின் சம்பளம் தானாகவே குறைந்துவிடும் என்று நம்புவதால், டிக்கெட் கட்டணத்தை குறைக்க முதலில் வற்புறுத்துவது என்ற முடிவுக்கு வினியோகஸ்தர்கள் வந்து இருக்கிறார்கள்.
 

ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்... அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!


ரஜினியின் உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணா படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. கடந்த ஏப்.29ம் தேதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜினி. சிகிச்சை முடிந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார்.

டாக்டர்கள் அறிவுரைப்படி தனது போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் 'ராணா' பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் கேஎஸ் ரவிகுமாரும் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 3ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரமாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

'பை பை கோலிவுட்!' - விடைபெற்ற ஷம்மு


காஞ்சிபுரம், தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த இளம் நடிகை ஷம்மு, நடிப்புக்கு குட் பை சொல்லி, அமெரிக்கா பறக்கவுள்ளார்.

'காஞ்சிவரம்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷம்மு. 'மலையன்', 'மாத்தி யோசி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந் நிலையில் சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாகவும் மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா செல்கிறார் ஷம்மு.

இது குறித்து ஷம்முவிடம் கேட்டபோது, "அடிப்படையில் நான் ஒரு தமிழ்ப் பெண். அமெரிக்காவில்தான் படித்து வளர்ந்தேன். டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு புளோரிடா மகாணத்தில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா' பல்கலைக்கழகத்தில் மீண்டும் என் படிப்பைத் தொடரப் போகிறேன்.

அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்த நான், சினிமாவுக்கு வந்ததது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற 'காஞ்சிவரம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது பெருமைக்குரியது.

கமல்ஹாசன் படத்தில் நடித்தாலும், ஜோடியாக நடிக்காமல் போனதுதான் வருத்தமாக உள்ளது. மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்," என்றார்.
 

கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்


ஜூம் சூப்பர் நோவா 2010 டாப் 50 பட்டியலில் ரஜினி-கடவுளுக்கு நிகரானவர் என புகழாரம்!

பாலிவுட்டின் டாப் 50 பிரபலங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஜூம் டிவி. இது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சேனல்.

ஜூம் சூப்பர்நோவா பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 விவிஐபிகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த சேனல். இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் டிவி. 'ரஜினியைப் பொருத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் ('Rajinikanth who is a demigod unto himself').

முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது இந்த பாலிவுட் சேனல். ஷாரூக் கான் 4வது இடத்திலும், ஏஆர் ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில். இந்த டாப் 10 -பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14வது இடம் கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர்.
 

சென்னையில் நடிப்புப் பயிற்சி நிறுவனம்-ராதிகாவுடன் தொடங்கினார் அனுபம் கெர்


பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர் ப்ரிபேர்ஸ் என்ற நடிப்பு பயிற்சி நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ராடன் டி.வியும் இணைந்து சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை கையெழுத்தானது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார்கள் அனுபம் கெர், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்.

முப்பத்தியேழு வருடங்களுக்கு முன் இதே ஜுலையில்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சியை ஆரம்பித்தேன். இன்று அதே ஜுலையில் சென்னையில் நடிப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அனுபர்கெர்.

அகமதாபாத், சண்டிகர் என்ற இரு இடங்களில் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வரும் இவர், சென்னையிலும் கிளை துவங்க காரணமாக இருந்திருக்கிறது ராடர்ன் டிவி.

மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம். இதில் பத்து நாட்கள் அனுபம் கெரெ வந்து வகுப்பெடுப்பாராம். ராதிகாவும் வகுப்புகள் நடத்துவார். அது போகட்டும்... முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் ராதிகா.

ஏற்கெனவே கூத்துப் பட்டறை என்ற அமைப்பு வேறு இதே வேலையை செய்து கொண்டிருக்கிறதே என்று அனுபம் கெர் - ராதிகாவிடம் கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு ரொம்ப சிம்பிளாக சொன்னார்கள் பதிலை: இங்கே அனுபம் கெரும் ராதிகாவும் இருக்கிறார்கள். அங்கே இல்லை. அதான் வித்தியாசம் என்றனர்.

டிப்ளமா, சர்ட்டிபிகேட் மற்றும் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் தனிப் பயிற்சி என மூன்று பிரிவுகளை இப்போதைக்கு வைத்துள்ளார்களாம்.
 

மங்காத்தா, வேலாயுதம்... குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்!


அஜீத் நடிக்கும் மங்காத்தா, விஜய் நடிக்கும் வேலாயுதம் படங்களின் ரிலீஸ் தேதி எப்போது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதமே இந்தப் படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இறுதி தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனால் கேரளாவில் இந்த இரு படங்களும் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மங்காத்தா படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என அதன் கேரள விநியோகஸ்தர் திவ்யா பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 100 திரையரங்குகளில் இந்தப் படத்துக்காக புக்கிங் நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கும் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பிடித்துள்ளார் அந்தப் படத்தின் விநியோகஸ்தர். வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வேலாயுதம் கேரளாவில் வெளியாகும் என்று கூறி, தியேட்டர்காரர்களிடம் அட்வான்ஸும் வாங்கியுள்ளனர்.

இதனால் தமிழக விநியோகஸ்தர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆஜீத் மற்றும் விஜய்க்கு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படங்கள் இவை என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
 

சிம்புக்கு சிக்ஸ்பேக் அட்வைஸ் தரும் வில்லன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புக்கு சிக்ஸ்பேக் அட்வைஸ் தரும் வில்லன்!

7/28/2011 12:44:12 PM

சல்மான் கானின் 'தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்கில் (ஒஸ்தி) சிம்பு நடித்து வருகிறார். படத்தை கமர்ஷியல் ஹிட் இயக்குனர் தரணி இயக்கி வருகிறார். 'தபாங்' படத்தில் சிக்ஸ்பேக் உடம்புடன் சல்மான் வில்லனுடன் சண்டை போடும் காட்சி உள்ளது. தபாங்கின் தமிழ் ‌ரீமேக் ஒஸ்தியிலும் இந்தக் காட்சியை வைக்க சிம்பு ஆசைப்படுகிறார். குறைந்தபட்சம் சிக்ஸ்பேக்காவது இருந்தால்தான் சல்மான்கான் செய்ததில் பாதியாவது கொண்டுவர முடியும் என நினைத்த சிம்பு எப்படியும் சிக்ஸ்பேக் அவசியம் என உணர்ந்துள்ளார். முப்பதே நாளில் இந்தி மாதி‌ரி ஆறே நாளில் சிக்ஸ்பேக் அட்வைஸ் தருகிறவர் சோனு சூட். இந்தியில் நடித்தவரே இதிலும் வில்லன். சோனு சூட் சல்மானைவிடவும் கச்சிதமாக உடம்பை பேணுகிறவர். வில்லனை அடிக்க ஹீரோவுக்கு சிக்ஸ்பேக் அட்வைஸ் தருவதே வில்லன்தான்.




 

அமலா பாலின் ஸ்வீட் வாய்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமலா பாலின் ஸ்வீட் வாய்ஸ்!

7/28/2011 12:43:17 PM

நடித்த 2வது படத்திலேயே சொந்தக்குரலில்தான் டப்பிங் பேசுகிறார் அமலா பால். தற்போது நடித்துவரும் வேட்டையிலும் இவர்தான் தனது கேரக்டருக்கு டப்பிங் பேசுகிறார். ஆளைப் போலவே அமலா பாலின் வாய்சும் ஸ்வீட்... தாராளமா டப்பிங் பேச வைக்கலாம் என்கிறார்கள் இயக்குனர்கள். வேட்டையை லிங்குசாமி இயக்குகிறார். மாதவன், சமீராரெட்டி, ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் அமலா பாலா சமீராவின் தங்கையாக நடிக்கிறார். கதைப்படி ஆர்யாவுக்கு ஜோடி.




 

சுகுமா‌ரி மருத்துவமனையில் அனுமதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுகுமா‌ரி மருத்துவமனையில் அனுமதி

7/28/2011 12:42:03 PM

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுகுமா‌ரி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் சுகுமா‌ரி உடல்நலக் குறைவு காரணமாக திருச்சூ‌ரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பி‌ரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




 

அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

7/28/2011 12:40:57 PM

விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் பில்லா வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பில்லா இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவதாக இருந்து, கடைசி நேரத்தில் வாய்ப்பு சக்‌ரி டோலட்டி வசம் சென்றது. அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா? இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? பில்லா 2-விலிருந்து விஷ்ணுவர்தன் விலகியதும் எழுந்த கேள்வி இது. இதுவரை பதிலில் இல்லாமல் இருந்த இந்தக் கேள்விக்கு அ‌‌ஜீத் விளக்கம் தந்துள்ளார். பில்லா கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நேரம் ச‌ரியாக அமைந்தால் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணைந்து படம் செய்வேன் என்று தனக்கேயு‌ரிய ஷார்ட் அண்ட் ஷார்ப் பாணியில் பதிலளித்துள்ளார் அ‌‌ஜீத்.




 

அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

7/28/2011 12:40:57 PM

விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் பில்லா வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பில்லா இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவதாக இருந்து, கடைசி நேரத்தில் வாய்ப்பு சக்‌ரி டோலட்டி வசம் சென்றது. அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா? இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? பில்லா 2-விலிருந்து விஷ்ணுவர்தன் விலகியதும் எழுந்த கேள்வி இது. இதுவரை பதிலில் இல்லாமல் இருந்த இந்தக் கேள்விக்கு அ‌‌ஜீத் விளக்கம் தந்துள்ளார். பில்லா கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நேரம் ச‌ரியாக அமைந்தால் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணைந்து படம் செய்வேன் என்று தனக்கேயு‌ரிய ஷார்ட் அண்ட் ஷார்ப் பாணியில் பதிலளித்துள்ளார் அ‌‌ஜீத்.




 

விருது வாங்கிய சீனு ராமசாமிக்கு அடுத்த வாய்ப்பு இல்லை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விருது வாங்கிய சீனு ராமசாமிக்கு அடுத்த வாய்ப்பு இல்லை?

7/28/2011 12:39:07 PM

தேசிய விருது பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு அடுத்த வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. சீனுவின் முதல் படம் கூடல்நகர். சுமாராகவே போனது. அதன்பிறகு எடுத்ததுதான் தென்மேற்குப் பருவக்காற்று. பல விருதுகளைப் பெற்று சீனு ராமசாமிக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்தது. அடுத்தப் படத்தை தயா‌ரிக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் ஒரு வருடத்துக்கு படத்தயா‌ரிப்பை தள்ளி‌ப் போட்டிருக்கிறார். தேமுதிக எம்எல்ஏக்கள் ஒரு வருடம் தொகுதியில் தங்கி கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற விஜயகாந்தின் கட்டளைதான் இந்த ஒரு வருட தாமதத்துக்கு காரணம்.




 

என்னுடைய இயக்கத்தில் தான் என் மகன் குறளரசன் அறிமுகம் ஆக வேண்டும்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னுடைய இயக்கத்தில் தான் என் மகன் குறளரசன் அறிமுகம் ஆக வேண்டும்!

7/28/2011 12:36:14 PM

டி.ராஜேந்த‌ரின் இரண்டாவது மக‌ன் குறளரசன் ஹீரோவாகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக டி.ஆர். தெ‌ரிவித்தார். மகன்கள் பிறந்த உடனேயே படப்பிடிப்பு‌‌க்கு அழைத்து வந்தவர் டி.ஆர். சிம்பு, குறளரசன் மட்டுமின்றி அவரது மகள் இலக்கியாவும் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். சிம்பு இப்போது தமிழின் முன்னணி நாயகன். சிம்புவை கதாநாயகனாக வைத்து படம் தயா‌ரிக்க பலரும் தயாராக இருந்தனர். என்றாலும் மகனை டி.ஆரே அறிமுகப்படுத்தினார். அதேபோல் அவரது இரண்டாவது மகன் குறளரசனுக்கும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் மகனை தானே ஹீரோவாக அறிமுகப்படுத்த விரும்புகிறார் டி.ஆர்.

 

ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

7/28/2011 12:35:25 PM

பல நாட்கள் காத்திருந்த தல ரசகரிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தாவின் ஆடியோ வெளியிடப்படுகிறது. அஜீத்தின் 50வது படமான மங்காத்தா நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டிருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் மங்காத்தா படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். பர்டல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ஒரு காரணம். சமீபத்தில் சோனி மியூஸிக் மங்காத்தா ஆடியோ ரைட்ஸை பெரும் தொகைக்கு வாங்கியது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. நேற்று சோனி நிறுவனம் மங்காத்தாவின் ஆடியோ வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது. ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மங்காத்தா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

7/28/2011 12:35:25 PM

பல நாட்கள் காத்திருந்த தல ரசகரிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தாவின் ஆடியோ வெளியிடப்படுகிறது. அஜீத்தின் 50வது படமான மங்காத்தா நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டிருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் மங்காத்தா படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். பர்டல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ஒரு காரணம். சமீபத்தில் சோனி மியூஸிக் மங்காத்தா ஆடியோ ரைட்ஸை பெரும் தொகைக்கு வாங்கியது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. நேற்று சோனி நிறுவனம் மங்காத்தாவின் ஆடியோ வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது. ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மங்காத்தா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




 

எனக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது! - அமிதாப்


என் அப்பா உபி… அம்மா சீக்கியர்… மனைவி பெங்காலி… மருமகன் பஞ்சாபி….மருமகள் துளு…. என் வாழ்க்கையில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது. அப்படி ஒரு சூழலை நான் உணர்ந்ததும் இல்லை,” என்கிறார் பாலிவுட் லெஜன்ட் அமிதாப் பச்சன்.

சாதிவாரி இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைகளை அலசும் படம் ஒன்றில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன்.

‘அரக்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதுதான் அமிதாப் இப்படிக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “என் தந்தை சாதி, இனம், மாநிலம் எதையும் பார்க்காமல் திருமணம் செய்தவர். சின்ன வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்தபோது, என் சாதியைக் குறிப்பிடவில்லை. பச்சன் என்று குடும்பப் பெயரை மட்டும் அப்பா கொடுத்தார். அதையே பெருமையாக நினைக்கிறேன். பச்சன் என்பது அப்பாவின் செல்லப் பெயர். அவ்வளவுதான்.

பின்னர் நான் ஒரு பெங்காலியை (ஜெயா) திருமணம் செய்தேன். என் சகோதரன் அஜிதாப் ஒரு சிந்திப் பெண்ணை திருமணம் செய்தார். மகள் ஸ்வேதா பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். என் மகன் ஒரு துளு பெண்ணை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்தார்.

எனவே இத்தனை நாள் வாழ்ககையில் எனக்கு சாதி பற்றிய சிந்தனையே வந்ததில்லை,” என்றார் அமிதாப்.

இந்தப் படத்தில் எல்லோரும் சமம்… எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தும் ஒரு கல்லூரி முதல்வராக நடித்துள்ளாராம் அமிதாப். இல்லாத ஏழை மாணவர்களுக்கு தனது செலவில் படிப்பு சொல்லித் தரும் கண்ணியமான வேடமாம்.

சரி, இட ஒதுக்கீடு பற்றி அமிதாப் என்னதான் நினைக்கிறார்?

இந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு அமிதாப் அளித்த பதில் சாமர்த்தியமானது. “இந்தப் படத்தில் வருகிற பிரின்ஸிபால் கேரக்டருக்காக நான் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இட ஒதுக்கீடு, சாதீய அமைப்புகள் பற்றி நிறைய படித்தேன். அதை வைத்து சொல்கிறேன். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களை சம நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மிக அவசியம்,” என்றார்.

 

சக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை!


சக ஹீரோயினுடன் காதல் தோல்வி ஏற்பட்டதால் மனமுடைந்த இளம் நடிகர் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் -ஹரீஷ் நாராயணன் ஆகியோர் இயக்கியுள்ள படம் இது. படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.

அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.

இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறுகையில், “அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். ‘எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை,’ என்றோம்.

அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்,” என்றார்.

அம்புலி தவிர, உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார் அஜய். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. அஜய் மரணத்தால் படம் பாதியில் நிற்கிறது.

 

ஆபாச படங்களுக்கு வரி விலக்கு ரத்து! - ஜெவுக்கு திரையுலகம் பாராட்டு


வன்முறை, ஆபாச படங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இயக்குநர் தங்கர் பச்சான், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

சினிமா என்னும் திரைப்படக் கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது.

இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக் கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள்தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும்.

இதே வரிவிலக்கு தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது.

தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம்.

தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்கு தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம்.

இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

அபிராமி ராமநாதன்

இது குறிதுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழில் பெயரிடப்பட்ட தமிழ் படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் முழு வரி விலக்கு அளித்தமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. தணிக்கைக் குழு அனுமதிக்கும் “யு” சான்றிதழ் பெற்ற, அனைவரும் பார்க்கலாம் என்ற தமிழர் பண்பாட்டிற்கேற்ப ஆபாசமற்ற மற்றும் வன்முறை காட்சிகளைத் தவிர்த்து எல்லோரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய தமிழ்ப் படங்கள் தயாராவதற்கு இதுமிகச் சிறந்த வழி வகுக்கும்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

அண்ணாமலை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.ஹரிகோவிந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு சான்றிதழ் பெறுவதற்கான சில புதிய நிபந்தனைகளை விதித்து வெளியிட்டமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நிபந்தனைகள் தமிழ்த் திரையுலகின் தரத்தினை மேலும் உயர்த்தும். இதன் மூலம் தரமான தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரும். தமிழக அரசின் சார்பாக கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக ஒரு புதிய குழுவினை அரசு நியமிக்க இருப்பதை அரசாணையின் மூலம் தெரிந்து கொண்டோம்.

தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 1,500 திரையரங்குகளின் பிரதிநிதியாக விளங்கும் எங்களது சங்கத்திற்கும் அந்த புதிய குழுவில் உரிய பிரதிநிதித்துவம் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபாசம், வன்முறை இல்லாத குடும்ப பாங்கான படங்களுக்கு வரி விலக்கு அளித்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்,” என்று கூறியுள்ளனர்.