58 வது பிலிம்ஃபேர் விருது : விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருது!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

58 வது பிலிம்ஃபேர் விருது : விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருது!

7/5/2011 10:44:39 AM

தென்னிந்திய திரையுலகத்தின் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் 58 வது பிலிம்ஃபேர் விருதுகள் ஹைதராபாத்தில் வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தமிழின் சிறந்த படமாக ‘மைனா’ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதை ‘அங்காடித் தெரு’ இயக்குனர் வசந்தபாலன் தட்டிச் சென்றார். மற்ற விருதுகள் வருமாறு.

சிறந்த நடிகர் – விக்ரம்(ராவணன்)
சிறந்த நடிகை – அஞ்சலி(அங்காடித் தெரு)
சிறந்த துணை நடிகர் – பார்த்திபன்(ஆயிரத்தில் ஒருவன்)
சிறந்த துணை நடிகை – சரண்யா(தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான்(விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடலாசி‌‌ரியர்- தாமரை(விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடகர்- கார்த்திக்
சிறந்த பாடகி – ஸ்ரேயா கோஷல்

 

Post a Comment