7/5/2011 11:32:39 AM
'வேங்கை’ பட டைரக்டர் ஹரி கூறியது: பதுங்கி பாயும் குணம் கொண்டது வேங்கை. அதுபோல் ஹீரோ தனுஷ் பதுங்கி வில்லன் பிரகாஷ் ராஜை தாக்குவார். தனுஷ் தந்தையாக ராஜ்கிரண், காதலியாக தமன்னா நடிக்கின்றனர். இதுவரை பார்க்காத தனுஷை இதில் பார்க்கலாம். கிளைமாக்ஸில் அனைவரின் கண்களையும் கலங்க வைப்பார். எனது படங்கள் எல்லாமே கமர்சியல் பார்முலாவில்தான் இருக்கும். 'பருத்திவீரன்Õ, 'மைனாÕ போன்ற கதைகளை இயக்கத் தெரியாது. அவற்றைப் பார்த்து ரசிக்கத்தான் தெரியும். கமர்சியல் படம் இயக்குபவர்கள் குறைவாக உள்ளனர். இன்னும் நிறைய இயக்குனர்கள் கமர்சியல் படம் இயக்க முன் வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை இயக்குனர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்தேன். நடிக்கும் ஆசை கிடையாது. நடிக்க வரும் இயக்குனர்கள் நல்ல படங்களை இயக்கும் தகுதி உடையவர்கள்தான். நடிப்பு மோகம் வந்துவிட்டால் இயக்குவதில் கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் நான் எந்த காலத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்க 6 மாதம் தேவைப்படுகிறது. பிறகு ஷூட்டிங் தொடங்கும்.
Post a Comment