இலியானாவின் மறுப்பு!
7/5/2011 10:52:22 AM
இலியானா இந்தியில் ரன்பிர் கபூருடன் நடிக்கிறார். அனுபவ் பாசு இயக்கும் இந்தப் படத்தில் இலியானாவுடன் இன்னொரு ஹீரோயினாக பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார். இரண்டு பேர் நடிப்பதால் எனக்குதான் முக்கியத்துவம் இருக்க சூண்டும் என்று இரு நடிகைகளும் தனித்தனியாக இயக்குனரை வலியுறுத்தியதாகவும், இலியானாவுக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் நடுவில் பனிப் போர் நடப்பதாகவும் மீடியாக்கள் எழுதின. வழக்கம் போல் இந்தச் சண்டையையும் இலியான மறுத்துள்ளார். பிரியங்காவை இதுவரை நான் சந்திக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது சண்டை என்று எழுதுவது அபத்தமாக உள்ளது என்றிருக்கிறார் இலியானா.
Post a Comment