இறப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரம் தருணி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.

|

India Taruni Said Her Goodbyes Before The Plane Crash
மும்பை:  நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா கிளம்புவதற்கு முன்பு தனது தோழிகளிடம் நான் உங்களைப் பார்ப்பது இது தான் கடைசி என்று ஜோக்கடித்துள்ளார். ஆனால் அது உண்மையாகிவிட்டது வருத்தத்திற்குரியது.

நேபாள விமான விபத்தில் குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் மற்றும் அவரது தாய் கீதா சச்தேவ் உள்பட 15 பேர் பலியாகினர். தருணி சுற்றுலா கிளம்பும் முன்பு தனது நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தான் நேபாளம் மற்றும் பெங்களூருக்கு சுற்றுலா செல்வதைக் கூறி, இது தான் நான் உங்களை கடைசியாகப் பார்ப்பது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடையவே, இல்லை.. இது வெறும் ஜோக் என்று தெரிவித்துள்ளார்.

உங்களை எல்லாம் நான் சந்திப்பது இது தான் கடைசி என்று தருணி் சொன்னார் என்று அவரது தோழி வ்ரிதி தெரிவித்தார். சுற்றுலா செல்லும் முன்பு எப்பொழுதும் இல்லாத பழக்கமாக அவர் தனது நண்பர்களை ஆரத் தழுவி பிரியா விடை பெற்று சென்றுள்ளார். மேலும் தான் சிறு, சிறு சண்டை போட்டவர்களை சந்தித்து சமாதானம் ஆகியுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் தருணிக்கு என்னாகிவிட்டது, எல்லாம் புதிதாக இருக்கிறதே என்று வியந்துள்ளனர்.

தருணியின் நெருங்கிய தோழி தனுஷ்கா பிள்ளை கூறியது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தருணி விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானால் எப்படி இருக்கும் என்று அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். கடைசியாக ஐ லவ் யூ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். பதிலுக்கு தனுஷ்கா ஐ லவ் யூ டூ அனுப்பியதை பார்ப்பதற்குள் தருணி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

தருணி மற்றும் அவரது தாயின் உடல் நேற்று மாலை 3 மணிக்கு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல்கள் மோசமான நிலையில் இருந்ததால் சவப்பெட்டிகள் திறக்கப்படவில்லை. அனைவரும் அஞச்லி செலுத்திய பிறகு மாலை 5 மணிக்கு சான்டா க்ரூஸ் மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
Close
 
 

Post a Comment