ராட்டினம் - இன்னும் ஒரு இயல்பான சினிமா!

|

Rattinam One More Good Cinema   
எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளியாகும் சில படங்கள், அப்படியே பார்ப்பவர் மனதைக் கட்டிப்போடும்.

சமீபத்தில் இந்த மாயத்தை நிகழ்த்திய படம் வழக்கு எண் 18/9. அடுத்து ராட்டினம்!

வெகு இயல்பான இந்தப் படத்தை எஸ் தங்கசாமி என்ற புதியவர் இயக்கியுள்ளார்.

கத்தி, ரத்தம், தாமிரபரணிக் கரையோர கொலைகள் என வன்முறை பூமியாக மட்டுமே காட்டப்பட்டு வந்த தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை, இத்தனை இயல்பாகவும் அழகாகவும் காட்டிய படம் என்றால் அது ராட்டினம்தான்.

இயக்குநர் மட்டுமல்ல, நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோருமே இந்தப் படத்தில் புதுசுதான்.

ஆனால் அப்படியொரு சுவடே தெரியாத அளவுக்கு மிக இயல்பாக இந்தப் படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்து இயக்குநர் தங்கசாமி நம்மிடம் கூறுகையில், "நான் இதற்கு முன் கனகு, நவீன் முத்துராமன் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளேன். கடைசியாக மார்கழி 16 படத்தில் பணியாற்றினேன்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு நேரத்தில் இருக்கும் மனநிலை உறுதியாக உள்ளது போல தெரிந்தாலும், நேரத்துக்கேற்ப அது மாறிவிடும். ஒரு ராட்டினம் போல மேலே போய் கீழே வந்து சுற்றிக் கொண்டே இருக்கும் இயல்புடையதுதான் மனசு, என்பதை தூத்துக்குடி வட்டாரப் பின்னணியில் கூறியுள்ளேன்," என்றார்.

நாளை வெளியாகவிருக்கும் ராட்டினம் படத்தின் முன்னோட்டக் காட்சி பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்களாம்!

விமர்சனத்தை நாளை எதிர்பாருங்கள்!
Close
 
 

Post a Comment