ஸ்ருதி நடிக்கும் ‘கார்த்திகைப் பெண்கள்’ புதிய தொடர்

Tiru Pictures New Serial Karthigai Pengal

சன் டிவியில் இரவு பத்துமணிக்கு கார்த்திகை பெண்கள் என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை திரு பிக்சர்ஸ் திருமுருகன் தயாரித்துள்ளார். ஏற்கனவே ‘நாதஸ்வரம்' தொடரை தயாரித்து இயக்கி வரும் திருமுருகன் கிரியேட்டிவ் ஹெட் ஆக பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய தொடரில் கதாநாயகியாக கல்கி திரைப்படப்புகழ் நடிகை ஸ்ருதி நடித்துள்ளார். கதாநாயகனாக பானுசந்தர் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகர் மகேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலான ஸ்ருதி சினிமாத்துறையை விட்டு விலகியிருந்தார். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதனையடுத்து இப்போது சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்ருதி. கார்த்திகைப் பெண்கள் தொடர் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார்.

ஜூலை 30ம்தேதி முதல் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகத்தொடங்கியுள்ளது.

கார்த்திகைப் பெண்கள் தொடர் நிச்சயம் அழுகைத்தொடராக இருக்காது என்று தொடர் தாயாரிப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா

I Don T Like Be Prasanna Wife Sneha

ஏதாவது ஒன்றை நெகடிவாக சொல்லி பப்ளிசிட்டி தேடுவதை பிரசன்னாவும் - சினேகாவும் வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இந்த முறை, எனக்கு பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறி, பின்னர் காதலியாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார் சினேகா.

சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் இருவரும் நடை போட்டனர். இதே பேஷன் ஷோவில் போன ஆண்டும் பங்கேற்றனர். ஆனால் அப்போது இருவருக்கும் காதல் என்ற விஷயம் கூட வெளியில் தெரிந்திருக்கவில்லை.

பேஷன் ஷோ முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய சினேகா கூறுகையில், "போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்," என்று ஆரம்பித்தார்.

"பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்," என்றார்.

 

பெரிய ஆசைகள் எதுவும் இல்லை: சீரியல் நடிகை ரம்யா

Serial Actress Ramya Interview

விஜய் டிவியின் ‘மதுரை' தொடர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரம்யா அதே டீமுடன் ‘சரவணன் மீனாட்சி' தொடரிலும் அமைதியான பெண்ணாய் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் ‘முத்தாரம்' தொடரில் கணவனை கொலை செய்துவிட்டு காதலுடன் போகத்துடிக்கும் பெண்ணாக வில்லத்தனம் செய்கிறார். சீரியல் மட்டுமல்லாது சினிமாவிலும் களம் இறங்கியுள்ள ரம்யா தனது சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.ஏ. படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக விஜய் டி.வி.யின் "காதல் கதை' என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலின் இயக்குநர் எ.பி. ராஜேந்திரன் மூலம் சுறுசுறுப்பான கிராமத்து பெண் கேரக்டர் கிடைத்தது. குறும்புத்தனமான அந்த நடிப்பு எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அப்போது விருப்பமில்லை. "காதல் கதை' சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நிறைய வாய்ப்புகள் வந்தன. "நிம்மதி', "கௌரவம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தேன். அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டது.

"மதுரை' சீரியலில் தண்டல் தாமரை என்ற சுறுசுறுப்பான கிராமத்து பெண்ணாக நடித்தேன். என்னவோ தெரியவில்லை எனக்கு அமைகின்ற கேரக்டர்கள் எல்லாமே கிராமத்தை மையமாக வைத்தே வருகின்றன. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்கள் அமையப் பெற்றதால் சுலபமாக மாறிவிட்டது.

ஆண்பாவம் தொடரில் போல்டான கேரக்டர் செய்தேன். இப்பொழுது ஒளிபரப்பாகிவரும் முத்தாரம் தொடரில் மாடர்னான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அது ஓரளவிற்கு நெகடிவ் கலந்தது. சூரியன் எஃப்.எம். விளம்பரத்தில் நடித்தது மறக்க முடியாததாகும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறேன்.

சீரியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆரோக்கியமாக இருக்கிறது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சீரியலில் இருந்து சினிமாவுக்கு யாருமே ஆர்வமாக போவதில்லை.

சினிமாவைப் பொறுத்த வரை புடவை மட்டுமே கட்டி நடிக்கும் குடும்பப் பாங்கான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். ‘தடையறத்தாக்க' திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது அதனால் ஈடுபாட்டுடன் நடித்தேன். மற்றபடி சினிமாவில் பெரிய அளவிலான ஆசைகள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சீரியல் சூட்டிங்கிற்கு கிளம்பினார் ரம்யா.

 

கோடிக்கணக்கான சொத்தில் டிம்பிளுக்கு பைசா கூட எழுதி வைக்காத ராஜேஷ் கன்னா!

Superstar Rajesh Khanna Didn T Leave A Penny For Wife

மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா தனது கோடிக்கணக்கான சொத்துக்களை 2 மகள்கள் பெயரில் எழுதி வைத்துள்ளார். மனைவி டிம்பிளுக்கு பைசா கூட இல்லை.

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். அவர் தான் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது கோடிக்கணக்கான சொத்துகளை மகள் டுவிங்கிள் மற்றும் ரிங்கி கன்னா ஆகியோரின் பெயர்களில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் அவரது மனைவி டிம்பிளுக்கு பைசா கூட எழுதவில்லை.

ராஜேஷ் கன்னாவும், டிம்பிளும் 1973ல் காதல் திருமணம் செய்து இரண்டு மகள்களைப் பெற்ற பிறகு 1984ம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் விவகாரத்து வாங்கவில்லை. ராஜேஷ் கன்னா உடல் நலம் பாதித்திருந்தபோது அவருக்கு அருகில் டிம்பிள் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை கார்ட்டர் ரோட்டில் உள்ள ராஜேஷ் கன்னாவின் பங்களாவான ஆசிர்வாதை அவரது நினைவாக அருங்காட்சியமாக மாற்ற டுவிங்கிளும், ரிங்கியும் தீர்மானி்ததுள்ளனர்.

 

ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஆண்களுக்கும் பரிசு!

Male Can Also Participate Simrans J

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். அதில் இனி ஆண்களும் பங்கேற்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான இந்த கேம்ஷோ நிகழ்ச்சியில் இதுவரை பெண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர்.

வெறும் கேள்வி-பதில் என்ற அறிவுபூர்வ எல்லையைத் தாண்டி, பெண்களுக்கான இந்த `கேம்ஷோ`வில் ஆண்களும் போட்டியாளர்களாக இப்போது பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் எண்ணிக்கையும், அவைகளின் மதிப்பும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

 

இளம் நடிகருக்காக படத்தயாரிப்பிலும் இறங்கும் அம்மணி!

கொஞ்ச நாள் முன்னாடி 'செல்வாக்கான பெண்மணி - இளம் நடிகர் நட்பு' பற்றி ஒரு மேட்டரை லேசு பாசா சொல்லியிருந்தோம். அதுக்கே ஏகப்பட்ட பேர் போனிலும் நேரிலும் விசாரித்துவிட்டார்கள். விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது!!

இப்போது அவர்கள் உறவில் இன்னும் ஒரு படி முன்னேற்றம். தன்னை நன்கு கவனித்துக் கொள்ளும் நடிகரின் சினிமா வாழ்க்கையை கொஞ்சம் கைத் தூக்கிவிடும் முயற்சியில் இருக்கிறாராம் அம்மணி.

சில ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன நடிகரின் படங்களை தூசு தட்டி, மிச்சத்தை முடித்து ரிலீஸ் பண்ணும் வேலையில் இறங்கியுள்ளாராம்.

இதை தானே நேரடியாக செய்யாமல், திரையுலகில் உள்ள இன்னொரு செல்வாக்கு மிக்க பெண்மணி மூலம் செய்யச் சொல்லியிருக்கிறாராம்.

நடிகருக்கு இதில் ஏக குஷி.

போகிற போக்கைப் பார்த்தால் சொந்தமாக படக் கம்பெனியே தொடங்கிவிடுவார் போலிருக்கிறது அம்மணி!

மேலும் கிசு கிசு செய்திகள்

 

கம்பி மேல் நடந்து குத்தாட்டம் போட்ட ரோஜா!

Roja Doing Item Number   

‘வேட்டையாடு' திரைப்படத்திற்காக கழைக்கூத்தாடியாக நடித்திருக்கிறாராம் ரோஜா. அதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள ரோஜா கம்பிமேல் நடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

90 களில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. செல்வமணியுடன் திருமணம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட அவர் ஆந்திர அரசியலில் பரபரப்பாக இருக்கிறார். சினிமாவில் இப்போது கதாநாயகிகளின் அழகான அம்மாவாக வலம் வரும் ரோஜா வேட்டையாடு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

கழைக்கூத்தாடிகளின் வாழ்கையைச் சொல்லும் அந்தப் பாடலுக்காக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனுடன் கழைக்கூத்தாடி வேடமணிந்து ஆடியிருக்கிறார் ரோஜா. மேலும் கழைக்கூத்தாடிகள் செய்வது போன்று கம்பி மேல் நடந்து சாகசம் செய்திருக்கிறாராம். இந்தப் படத்திற்காக அவருக்கு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்திருக்கின்றனராம்.

இந்தப் படத்தை விஜயபாலன் இயக்குகிறார். விடியல் ராஜு தயாரிக்கிறார். ரோஜா மற்றும் பாண்டியராஜனுடன் உதயதாரா, மனோ பாலா, நெல்லை சிவா, காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘நெஞ்சினிலே' படத்தில் ‘தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா' என்ற பாடலுக்காக குத்தாட்டம் ஆடியவர் ரோஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடனம் ஆடியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெனீபர் லோபஸின் பெயரை தொப்புளில் பச்சை குத்திய காதலர்

Lopez S Boyfriend Tattoos Her Name

லாஸ் ஏஞ்சலெஸ்: நடிகையும், பாப் பாடகியுமான ஜெனீபர் லோபஸின் காதலர் காஸ்பர் ஸ்மார்ட், தனது காதலியின் பெயரை தனது தொப்புளில் பச்சை குத்தி வைத்துள்ளாராம்.

லோபஸ் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்த இதைத் தவிர சிறந்த வழி அவருக்குத் தெரியவில்லையாம்.

இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில், காஸ்பர் குத்தியுள்ள பச்சை படு செக்ஸியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தனக்குப் பிடித்த இடத்தில்தான் பச்சை குத்தியுள்ளார் காஸ்பர் என்றும் கூறி சிரித்தாராம். அந்த பச்சையையும், அதைக் குத்திய காஸ்பரையும் ரொம்பவே நேசிப்பதாகவும் சிலாகித்துக் கூறினாராம்.

ஜெனீபருக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருடைய காதலருக்கு அவரை விட 18 வயசு கம்மி என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்பர், உங்களுடையது ஸ்மார்ட் மூவ்தான்...

 

40 லட்சம் வாங்கித்தந்த இயக்குநர்!

Mysskin S Struggle Narain 40

அஞ்சாத ஹீரோ நடிகர் முகமூடி படத்திற்காக வில்லனாக மாறியவர். அவருக்கு பேசிய சம்பளத்தை தராமல் தயாரிப்பு தரப்பினர் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் கடுப்பான இயக்குநர் மிஸ்கின் என்னுடைய நட்பினால் வில்லனாக மாறியவர் அவர் எனவே பேசிய பணம் 40 லட்சத்தை கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சண்டை போட்டுள்ளார். தமிழில் மார்க்கெட் இல்லாத நடிகருக்கு 4 லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்.

ஹீரோவாக இருந்த அவனை வில்லனாக்கியவன் நான் எனவே பேசிய பணத்தை எண்ணி வையுங்கள் என்று முழு பணத்தையும் வாங்கிக்கொடுத்தாராம் மிஸ்கின்

மிஸ்கினைப் பற்றி மீடியாக்களில் செய்தி வந்தாலே அது அவரைப் பற்றி குறை கூறுவதாகத் தான் இருக்கும். ஆனால் முதல் முறையாக நட்பு நடிகருக்காக சண்டை போட்டு சம்பளம் வாங்கிக்கொடுத்தது திரையுலகில் ஆச்சரியமாக பேசப்படுகிறது.

 

சுதீப் படங்களுக்கு மவுசு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'நான் ஈ' திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பின் கன்னட படங்களுக்கு மவுசு மேலும் கூடியிருக்கிறதாம். காரணம் நான் ஈ படத்தில் அவருடைய மிரட்டல் நடிப்பு தான். ஏற்கனவே அவருடைய கன்னட படங்கள் சூப்பர் ஹிட்டாகும். இப்போது இந்த படத்ததுக்கு பிறகு அவரது படங்களுக்க மவுசு இன்னும் அதிகமாகி விட்டதாகும். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா பட வாய்ப்புகள்ளும் வருகிறதாம்.


 

ஜோடி போட்டு நடிக்கும் சினேகா டிரெண்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகளுக்கு மத்தியில் கணவர் பிரசன்னாவுடன் ஜோடி போட்டு நடித்து டிரெண்ட் மாற்றுகிறார் சினேகா. அஜீத், ஷாலினி, சூர்யா, ஜோதிகா ஜோடிகளில் திருமணத்துக்கு பிறகு ஷாலினியும், ஜோதிகாவும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் காதல் திருமணம் செய்த பிரசன்னா,சினேகா ஜோடி புதிய டிரெண்ட் உருவாக்கி வருகிறது. விளம்பரங்களில் தொடங்கி, திரைப்படம் வரை இந்த ஜோடிகள் இணைந்து நடித்து வருகின்றனர். கார்த்தி நடிக்க வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் சினேகா, பிரசன்னா இணைந்து முக்கிய காட்சியில் நடிக்க உள்ளனர். இதுதவிர பொது மேடைகளிலும் சினேகா, பிரசன்னா ஜோடியாக பங்கேற்கின்றனர். சென்னையில் நடந்த ஆடை அலங்கார நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து மேடையில் அணிவகுத்து வந்தனர். இதன் மூலம் திருமணத்துக்கு பிறகு சினேகா நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்ற பேச்சை பொய்யாக்கி இருக்கிறார். தற்போது ஹரிதாஸ் என்ற படத்தில் சினேகா நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.


 

சைப்-க்கு ஹாலிவுட் நடிகை நோட்டீஸ்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி நடிகர் சைப் அலிகானுக்கு ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் பரவியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் பட ரிலீசுக்கு முன்பாக இந்தி நடிகர், நடிகைகள் பரபரப்புக்காக ஏதேனும் தகவல் கூறுவார்கள். இதனால் தங்கள் படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பார்கள். சமீபத்தில் சைப் அலிகான் நடிப்பில் காக்டெய்ல் படம் ரிலீசானது. இப்படம் ரிலீசான 3 நாட்கள¢ கழித்து ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேனுடன் சேர்ந்து நடிப்பதாக சைப் அலிகான் கூறினார். இதை மீடியா பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டது. உடனே தான் ஜோக் அடித்ததாக கூறி அதை மறுத்தார் சைப். இந்நிலையில் தன்னுடன் நடிப்பதாக புரளி கிளப்பியதற்காக சைப் அலிகானுக்கு நடாலி போர்ட்மேன் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை சைப் தரப்பு மறுத்துள்ளது. சைப் அலிகானுக்கு யாரும் நோட்டீஸ் அனுப்பவில்லை. அவர் காமெடியாக சொன்ன ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தியும் பிறகு அவருக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறியும் மீடியாதான் சர்ச்சையை கிளப்பி வருகிறது' என சைப் அலிகானுக்கு நெருங்கியவர்கள் கூறினர். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சைப் சந்திக்கும்போதும் அவரது திருமணம் பற்றியே கேள்வி கேட்கிறார்கள். அதை பற்றியே செய்தி வெளியிடுகிறார்கள். அதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பவே அவர் நடாலியுடன் நடிப்பதாக ஜோக் அடித்தார்' என சைப் அலிகானின் நண்பர் ஒருவர் கூறினார்.


 

கிளாமருக்கு டாட்டா காட்டிய லட்சுமிராய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'தாண்டவம்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. தாண்டவம் படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். 'தெய்வதிருமகள்' படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ள லட்சுமிராய் வித்தியாசமாக நடித்துள்ளாராம், அப்படி என்ன வித்தியாசம் கிளாமர் உடை அணிந்து கவர்ச்சியாகவே தோன்றி வந்த லட்சுமிராய் இந்த  படத்தில் கிளாமருக்கு டாட்டா காட்டி இருக்கிறாராம்.


 

வித்யாவை காப்பி அடிக்க இல்லை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
வித்யாபாலன் நடிப்பை பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் கரீனா கபூர். கரீனா கபூர் நடித்து வெளியாக உள்ள படம் 'ஹீரோயின்'. இதில் சினிமா நடிகையாகவே அவர் நடித்திருக்கிறார். படத்தில் போதைக்கு அடிமையானவராக அவர் நடித்துள்ளார். முன்னதாக சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்திலும் அதே போன்ற வேடத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். கிளாமர் வேடத்தை ஏற்று அவர் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 'ஹீரோயின்' படத்தில் கரீனாவின் வேடம் பற்றி தகவல் பரவியதால், 'வித்யாபாலன் பாணியை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? என்று கேட்டபோது கோபத்தில் சீறினார் கரீனா. அவர் கூறும்போது, 'நான் யாரைப் பார்த்தும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நானே பெரிய ஹீரோயின்தான். என்னைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். தற்போது பெரிய பேனர் படங்களில் நடித்து வருகிறேன். இந்நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. திருமணத்தை பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.


 

பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!

Naan Ee Continues With Packed Houses   

சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.

இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.

இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம்.

பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.

இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!

காசி தியேட்டர் என்றல்ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!

 

இயக்குநரானார் நடிகை கங்கனா ரணவத்!

 

கேட் வின்ஸ்லட்டுக்கு 'ஷேவ்' செய்து ஷூட்டிங் நடத்திய கேமரூன்!

Winslet Shaved Arms Titanic

டைட்டானிக் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி கேட் வின்ஸ்லெட்டின் கைகளில் முடி இருந்ததால், அதை ஷேவ் செய்து பின்னரே படப்பிடிப்பை நடத்தினாராம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதை கேட்டே சொல்லியுள்ளார்.

1997ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் டைட்டானிக். நிஜ டைட்டானிக் கப்பலைப் பற்றிய ஒரு கற்பனைக் கதைதான் டைட்டானிக். இப்படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிட்டிஷ் நடிகை கேட் வின்ஸ்லட். படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அசை போட்டுள்ளார் கேட்.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

படத்தில் இரவு நேர காட்சிகளைப் படமாக்கியபோது ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரு சிக்கல் தெரிந்தது. அதாவது எனது கை மற்றும் அக்குள் பகுதியில் லேசாக முடிகள் இருந்ததால் அவர் தயங்கினார். காட்சியை அவை பாழ்படுத்துவதாக உணர்ந்தார்.

இதையடுத்து என்னிடம் வந்த அவர் உனக்கு நாங்கள் ஷேவ் செய்யப் போகிறோம் என்றார். எனக்கோ சிரிப்பாக வந்தது. ஆனால் அவர் சீரியஸாக இருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. மேக்கப்மேன் கையில் பிளேடு மற்றும் ஷேவிங் கிரீமுடன் வந்து நின்றார். பிறகு எனக்கு ஷேவ் செய்தார். படு நகைச்சுவையாக இருந்தது அது. நீட்டாக ஷேவ் செய்த பின்னர்தான் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் கேமரூன்.

அப்போது கடும் குளிர் நிலவியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. என்னை விட நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோதான் குளிரைத் தாங்க முடியாமல் நடுங்கினார். 21 வயதான அவரைப் பார்த்தபோது எனக்கு ஒரு குழந்தை போலத்தான் தெரிந்தார் என்றார் சிரித்தபடி.

டைட்டானிக் படத்தில் கேட் நடித்தபோது அவருக்கு வயது 20தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வசூலை வாரிக் குவிக்கும் பேட்மேன் - தி டார்க் நைட் ரைசஸ்!

The Dark Knight Rises Top Box Office Charts   

கிறிஸ்டோபர் நோலனின் கடைசி பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைசஸ், உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், இந்தப் படம் 64 மில்லியன் டாலர்களை இந்த வார இறுதியில் குவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 537.3 மில்லியன் டாலர்களை இந்தப் படம் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதால், வசூல் பாதிக்குமோ என முதலில் அச்சப்பட்டதாம், இந்தப் படத்தின் வெளியீட்டாளர் வார்னர் நிறுவனம். ஆனால் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய அன்றும்கூட, நல்ல வசூல் தொடர்ந்துள்ளது.

சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், பேட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஐஸ் ஏஜ் 4-ம், மூன்றாவது இடத்தில் தி வாட்ச் படமும் உள்ளன.

நான்காவது இடத்தில் ஸ்டெப் அப் ரெவால்யூஷனும், ஐந்தாவது இடத்தில் டெட் படமும் உள்ளன.

 

ரஜினி ok சொன்னால்.. நான் ரெடி..

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ராஜமவுலி, 'ரஜினி ok சொன்னால் .. அவரை இயக்க நான்' ரெடி என்று கூறியுள்ளார். சமீபத்தில் 'நான் ஈ' படத்தை பார்த்த ரஜினி, மனம் விட்டு ராஜமவுலியை பாராட்டினாராம். இதனையடுத்து, ரஜினி பாராட்டியதை பெரிய விருதுக்கு சமமாகக் கருதுகிறார் ராஜமவுலி. தமிழ் சினிமாவில் இருக்கும் அற்புதமான மனிதர்களில் ரஜினியும் ஒரவர் எனக் கூறிய ராஜமவுலி, அவரைப் போன்ற உண்மையான ரசிகரைப் பார்க்க முடியாது. என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்சவர் யார்? யாரை இயக்க வேண்டும் என்பது உங்கள் கனவு? என்று கேட்டதற்கு ராஜமவுலி சொன்ன ஒரே பதில் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினி உத்தரவிட்டால் அவரை வைத்து படம் இயகக் நான் ரெடி என்று வெளிப்படையாக ரஜினியிடம் சான்ஸ் கேட்டு இருக்கிறார் ராஜமவுலி.


 

சொத்துக்களை மகள்களுக்கு எழுதிய ராஜேஷ் கன்னா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா தனது அனைத்து சொத்துக்களையும் 2 மகள்கள் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார். உயிலில் மனைவி டிம்பிள் கபாடியா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்ட நடிகர் ராஜேஷ் கன்னா கடந்த 18ம் தேதியன்று பாந்த்ராவில் உள்ள தனது ஆசீர்வாத் பங்களாவில் காலமானார். ராஜேஷ் கன்னா வுடன் ஆசீர்வாத் பங்களாவில் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டும் அனிதா அத்வானி என்ற பெண் ஆசீர்வாத் பங்களாவுக்கு உரிமை கோரி ராஜேஷ் கன்னா குடும்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜேஷ் கன்னா பல ஆண்டுகளுக்கு முன்பே சொத்துக்கள் குறித்து தனது நம்பிக்கையான வழக்கறிஞர் மூலம் உயில் எழுதி வைத்திருந்தார். இந்த உயிலில், தனது அனைத்து சொத்துக்களையும் மகள்கள் டுவிங்கிள்(அக்ஷய் குமாரின் மனைவி), ரிங்கி ஆகியோர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். இந்த உயிலில் மனைவி டிம்பிள் குறித்து  குறிப்பிடவில்லை. ராஜேஷ் கன்னாடிம்பிள் தம்பதியர் திருமணமாகி 11 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு பிரிந்து வாழ்ந்தாலும் கடைசிவரை விவாகரத்து கோரவில்லை.  ராஜேஷ் கன்னாவின் கடைசி காலங்களில் டிம்பிள் அவரை அருகில் இருந்து கவனித்து கொண்டார்.


 

அமிதாப் ரோலில் தல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பா' புகழ் இயக்குனர் பால்கி இயக்கும் English Vinglish படத்தில் அஜீத் குமார் கௌரவ தோற்றத்தில் நடிக்கயிருக்கிறார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார். இந்த படத்தின் இந்த பதிப்பில் அமிதாப் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனையடுத்து தமிழில் யாரை நடிக்க வைக்கலாம் என பால்கி யோசித்து கொண்டு இருந்தாராம். இந்நிலையில் அஜீத்தை சந்தித்த பால்கி கதை சொன்னதும், அமிதாப் நடித்த கெஸ்ட் ரோலில் தான் நடிப்பதாக ஒப்புக் கொண்டாராம் அஜீத்.


 

50 தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை. ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது. 1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான 'ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது. சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

சன் டிவியில் இந்த வாரம் இளையராஜா-விஜய் இணைந்து கலக்கிய காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ்!

Vijay Week Sun Tv

சன் டிவியில் தற்போது விஜய் வாரம் தொடங்கியுள்ளது. அமர்க்களமான ஐந்து சூப்பர் ஹிட் விஜய் படங்களை இந்த வாரத்தில் சன் டிவியில் காட்டுகின்றனர். அதில் இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் உருவான காதலுக்கு மரியாதை மற்றும் பிரண்ட்ஸ் ஆகிய இரு படங்களும் ரசிகர்களை குதூகலிக்கக் காத்துள்ளன.

நேற்று தொடங்கிய விஜய் வாரத்தில் இன்று பாடல்களுக்குப் பெயர் போன துள்ளாத மனமும் துள்ளும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதன்கிழமையான நாளை காதலுக்கு மரியாதை ஒளிபரப்பாகிறது. விஜய்க்கு புதிய முகம் கொடுத்த படம் இது. கதைக்காகவும், நடிப்புக்காகவும் ஓடிய படம் என்றாலும், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையை ரசிகர்கள் இன்று வரை மறக்கவில்லை. ஒவ்வொரு பாடலும் ஒரு லட்டு என்ற கணக்கில், படம் முழுக்க ராஜாவும் சேர்ந்து நடை போட்டதை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

வியாழக்கிழமை விஜய், தேவயானி, ரம்பா நடித்த நினைத்தேன் வந்தாய் ஒளிபரப்பாகிறது.

வெள்ளிக்கிழமைதான் ஹைலைட் படம். விஜய்யின் அட்டகாச நடிப்பு, வடிவேலுவின் அதிரிபுதிரி காமெடி, முத்தாய்ப்பாய், இளையராஜாவின் இசை என படம் முழுக்க திருவிழாக் கோலம்.

எந்தப் படத்தைப் பார்க்க மறந்தாலும் மறக்காமல் பிரண்ட்ஸை பார்த்து விடுங்கள், சிரிச்சு சிரிச்சு கவலை மறந்து ராத்திரி நன்றாக தூங்கலாம்...

 

சைக்கோ கேரக்டர் இருந்தா கொடுங்களேன்: நடிகை பாரதி

I Like Psycho Character Ammuvakiy Naan

ஜெயா டி.வி. 'ருத்ரம்' தொடரில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து வருபவர் அம்முவாகிய நான்' படத்தில் நடித்த நடிகை பாரதி.

திடீரென்று ரகசிய திருமணம் செய்து திருமதி பாரதி ஆனபிறகு மீடியாவை விட்டு ஒதுங்கிய அவர் இப்போது சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

திடீர் என்று டிவி பக்கம் ஒதுங்கிய காரணம் கேட்டால், ''கல்யாணம், குழந்தைனு செட்டில் ஆன பிறகு, சீரியல்தானே நமக்குச் சரி!?' என்று சிரிக்கிறார். ''வழக்கமா அழுகை சென்ட்டிமென்ட், பிளாக்மெயில் இல்லாத சீரியல் இது. இயல்பான காட்சிகள், ஷார்ப் வசனம், மிரட்டல் ட்விஸ்ட் இருந்ததாலதான் நடிக்கச் சம்மதிச்சேன். சினிமாவிலும் நெகட்டிவ் அல்லது சைக்கோ கேரக்டர் கிடைச்சா சூப்பரா பண்ணுவேன் என்றார். ( இயக்குநர்கள் கவனிக்கவும் )

அம்முவின் பையன் ஹரிக்கு கிரிக்கெட் என்றால் உயிராம். சச்சின் மாதிரி அவனை பெஸ்ட் ப்ளேயர் ஆக்கவேண்டும் என்பது பாரதியின் கனவாம்.

 

மனோஜும் மகத்தும் மோதிக்கொண்டதில் பலனடைந்த டாப்ஸி

Tapsee Gets 1 Crore   

கடந்த மாதம்வரை டாப்ஸி பற்றி அறியாதவர்கள் கூட நடிகர் மனோஜ் - மகத் அடிதடிக்குப் பிறகு டாப்ஸி பற்றி தெரிந்து கொண்டனர். அந்தளவிற்கு டாப் டூ பாட்டம் டாப்ஸிக்காக நடந்த அடிதடி பற்றிதான் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து செய்தி வெளியிட்டன. இந்த பப்ளிசிட்டியால் டாப்ஸிக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.

சென்னையில் உள்ள பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்று, தங்களது கம்பெனி விளம்பரத்தில் நடிக்க டாப்ஸியைக் கேட்டிருக்கிறது. படங்களை எதிர்பர்த்துக்கொண்டிருந்த டாப்ஸிக்கு இப்படி விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்ததும், கடுப்பாகிப் போனார். நிறைய சம்பளம் கேட்டால் போய் விடுவார்கள் என்று நினைத்து ஒரு கோடி வேண்டும் என்று குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். ஆனால் அந்த நிறுவனமோ 1 கோடி கொடுக்க நாங்கள் ரெடி என்று கூலாகக் கூறியிருக்கிறார்கள். ஆடுகளம்' படத்திற்குப்பின் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த டாப்ஸிக்கு மஞ்சு மனோஜும், மகத்தும் ஓசியில் பப்ளிசிட்டி கொடுத்து தூக்கிவிட்டுவிட்டார்களே என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். இதுகூட நல்ல விளம்பராமா இருக்கே நாமளும் முயற்சி செய்யலாமா என்று மார்க்கெட் இல்லாத நடிகைகள் யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

 

ஒரே டி ஷர்ட் அணிந்து விவகாரமாய் போஸ் கொடுத்த விவேக் ஓபராய் - மல்லிகா ஷெராவத்!

Vivek Mallika S Hot Pose Kismat Love Paisa Dilli

விளம்பரத்துக்காக என்ன வேணாலும் செய்யலாம் என்பது சினிமாவில் விதி. அதுவும் பாலிவுட்டில் கேட்கவே வேண்டாம்.

முன்பு பரபர நடிகராக இருந்து இப்போது டல்லடித்துக் கொண்டிருக்கும் விவேக் ஓபராயும், மல்லிகா ஷெராவத்தும் இப்போது புதிதாக ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு: 'கிஸ்மத், லவ், பைசா, டில்லி'.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் உள்ள ஆர் சிட்டி மாலில் நடந்தது.

போஸ்டர்களுக்கு இவர்கள் இருவரும் கொடுத்த போஸ்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. இருவரும் சிகப்பு நிற டி சர்ட் ஒன்றை சேர்ந்து அணிந்து கொண்டு நின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் உள்ளாடை கூட அணியாமல் அப்படியே இந்த டிஷர்ட்டை மாட்டிக் கொண்டிருப்பது போலத்தான் தோற்றமளித்தது.

இருவரையும் இப்படி செம செக்ஸியாகப் பார்த்ததில் கிக்கேறிவிட்ட ஒரு ரசிகர், 'ஆப் கா அன்டர்வேர் கஹா ஹை' என்று குரல் எழுப்ப, அடடா, என்னமா வரவேற்பு கிடைத்திருக்கிறது நம்ம படத்தின் புதுவித போஸ்டர்களுக்கு என்று புளகாங்கிதத்துடன் ட்வீட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் விவேக்கும் மல்லிகாவும்!

 

நடிகைகளின் 'சேவையில்' இளம் கட்டுமஸ்து நடிகர்!

நல்ல உயரம். கட்டான உடல்... எப்பவும் ஃபிட்டான தோற்றம். பிரபல நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்தவர்தான் நடிகர். விளம்பரங்களில் கூட வந்திருக்கிறார்.

ஆனாலும் நினைத்த அளவு சம்பாதிக்க முடியவில்லை. பேஷன் ஷோக்களில் ஆண் மாடலாக வாய்ப்புக் கிடைத்தது. ஒரு ரவுண்ட் வந்து பார்த்தார். அட, ஏக வாய்ப்புகள் வந்துவிட்டன. ஆனால் சினிமா ஹீரோவாக அல்ல... அந்தரங்க ஹீரோவாக!

சில முக்கிய நடிகைகள் தங்களின் பர்சனல் மாடலாகக் கூப்பிட்டார்களாம், நடிகரின் கட்டுமஸ்து உடலைப் பார்த்ததும். கொஞ்சமும் யோசிக்கவில்லை நடிகர்.

சினிமாவில் கூட கிடைக்காத பணமும், 'வாய்ப்பும்' நேரில் கிடைக்கும் சந்தோஷத்தில் ஈசிஆர் பங்களாக்கள் அல்லது கெஸ்ட் அவுஸ்கள் அடிக்கடி போக ஆரம்பித்துவிட்டார்.

நடிகரின் இப்போதைய ஒரே இலக்கு, உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வதில் மட்டுமே.

சுவர் இருந்தாதானே... ம்ஹூம்... மட்டமான மேட்டருக்கு ஒஸ்தியான உதாரணம் எதுக்கு!

 

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்க வரும் அமலா!

Amala Is Back With Shekar Kammula Movie

எண்பதுகளில் ஆரம்பித்து, தொன்னூறுகளின் ஆரம்பம் வரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை அமலா.

1992-ல் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கியவர், இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகாலமாக விலங்குகள் வதைக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல இயக்கும் ‘லைப் இஸ் பியூட்டிபுல்' என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமலா கணவர் நாகார்ஜுனா கூறுகையில், "அம்மா வேடத்தில் நடித்தாலும் அமலாவைப் பார்த்தால் அழகான அக்கா மாதிரிதான் தெரிகிறார்," என்றார்.

தனது மறுபிரவேசம் பற்றி அமலா கூறுகையில், "இத்தனை நாட்களும் எனது மகன் அகிலை வளர்ப்பதிலும் சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன். இப்போது அகில் வளர்ந்து விட்டான். அவன் பக்கத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தொடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை.," என்றார்.

 

50க்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்

Avm Has Produced More Than 50 Serial

சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை. ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.

தொலைக்காட்சி மட்டும் இல்லையென்றால் ஏ.வி.எம் நிறுவனம் என்றோ இல்லாமல் போயிருக்கும் என்று ஏ.வி.எம். சரவணன் ஒருமுறை

தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது கூறினார். தொலைக்காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியைப் போலவே ஏ.வி.எம் நிறுவனத்தின் தொடர்களும் வளர்ச்சியடைந்துள்ளன என்றால் மிகையாகாது.

1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது.

சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி உத்தரவிட்டா போதும்... - ராஜமவுலி

Rajamouli Ready Direct Superstar Rajini

எந்த நடிகரும் இவர் பேச்சுக்கு கட்டுப்படுவார் எனும் அளவுக்கு இன்று ஏக மவுசுடன் திகழ்கிறார் தெலுங்கு இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி.

ஆனால் அந்த ராஜமவுலியையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கும் à®'ரே நடிகர்... வேறு யார்.. ரஜினி தான்.

நான் ஈ பார்த்துவிட்டு, ரஜினி பாராட்டியதை பெரிய விருதுக்கு சமமாகக் கருதுகிறார் ராஜமவுலி.

அவர் சொல்கிறார், "இந்தப் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளில் முக்கியமானது, ரஜினி சாருடையதுதான். அவரைப் போன்ற உண்மையான ரசிகரைப் பார்க்க முடியாது. எனக்கு பெரிய விருது கிடைச்ச மாதிரி உணர்கிறேன்," என்றவரிடம்,

தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்சவர் யார்? யாரை இயக்க வேண்டும் என்பது உங்கள் கனவு? என்று கேட்டோம்.

ராஜமவுலி கூறுகையில், "இரண்டு கேள்விக்குமே à®'ரே பதில்தான். எனக்குப் பிடிச்ச à®'ரே ஹீரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரை இயக்க வேண்டும் என்பது என் கனவு.

ரஜினியை சந்திக்கும் அற்புதமான தருணம் எனக்கு வாய்த்தது. என் கனவு நாயகனே, நான் இயக்கிய படத்தை என்னுடன் பார்த்துப் பாராட்டியதை விட, எனக்கு என்ன பெருமை வேண்டும்?

என்னுடைய 'மகதீரா' பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டு பாராட்டினார்.

இப்ப 'நான் ஈ' படத்தை என்னோடதான் பார்த்தார். 'நீங்க வானத்தைத் தொட்டுட்டீங்க'னு உற்சாகமா பாராட்டினார்.

நான் பார்த்துப் பார்த்து சிலிர்க்கும் அற்புதமான கலைஞர் ரஜினி சார். அவர் பாராட்டினதுல எனக்குத் தலைகால் புரியலை என்பதுதான் உண்மை,'' என்றார்.

அப்ப நீங்கதான் ரஜினியின் அடுத்த சாய்ஸா...?

அதை அவர்தான் சொல்ல வேண்டும். சொல்லக்கூட வேணாம்.. உத்தரவிட்டாலே போதும்... நான் ரெடி!!

 

தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக்

Lost Faith Jayalalithaa Actor Karthik

நெல்லை: தமிழகத்தில் அராஜக ஆட்சி நடப்பதாக மறுகால்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலையின் குடும்பத்தாரை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

வானுமாமலையி்ன் மனைவி்க்கு ஆறுதல் கூறிய அவர் ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் வானுமாமலை சுடப்பட்ட கோவில் முன்பு இருந்து டிராக்டரில் நின்றபடி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் ஒரு குடும்பம் தெருவில் நிற்கின்றது. முதல்வர் மீது மரியாதை வைத்திருந்தேன். தற்போது அது மங்கிவிட்டது. மணல் கொள்ளை என்று கூறுபவர்கள் கோடி, கோடியாகக் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பிடிக்க முடியுமா? இன்ஸ்பெக்டர் வெறும் அம்பு மட்டும்தான், அதனை எய்தவர்களின் விபரம் விரைவில் வெளிவரும்.

ரூ.3 லட்சமும், வேலையும் கொடுக்க முடிந்தவர்களுக்கு குழந்தைகளின் தந்தையை கொடுக்க முடியுமா? இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். வானுமாமலை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது. இதற்காகத்தான் ஓட்டு போட்டோமா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார்.

 

இவரோட அலப்பரைக்கு அளவே இல்லையா?

Vijay Adhiraj Struggling Shooting Spot

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகராக வலம் வந்த விஜய் ஆதிராஜ் இப்போது இயக்குநராகிவிட்டார். ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் புத்தகம் படத்தை இயக்கிவரும் விஜய் ஆதிராஜ் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லையாம். படப்பிடிப்பு தளமே பவர் ஸ்டாருக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறதாம்.

சின்னத்திரையில் நடிக்கும்போதே கேமிராவை விட்டால் ஏ.சி. ரூம். அதைவிட்டு வெளியே வந்தால் ஏ.சி கார் என்று எந்நேரமும் ஏ.சி.யிலேயே குடியிருப்பார். இயக்குநரானபின்னர் வெயிலியே காயவேண்டியிருக்கிறது. 'நம்மால ஆகாதுப்பா இதெல்லாம்' என்று முதல் நாளே அலுத்துக் கொண்ட விஜய் ஆதிராஜ், தனக்கென்று குடை பிடிக்க தனி ஆளையே போட்டுவிட்டார் அப்புறம்.

ஸ்பாட்டில் இவர் அங்கும் இங்கும் ஓடியாடி டைரக்ட் பண்ணிக் கொண்டிருக்க, குடை பிடிக்கிற ஆள் இவர் ஓடும் திசையெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாராம். இந்த காட்சியை மட்டுமே தனியாக ஷூட்டிங் எடுத்து வெளியிட்டால் இந்த வருடத்தின் மெகா வசூல் காமெடிப்படமாக இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இதுதான் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பதோ !

 

'உங்க பலான வீடியோக்களை நீக்க முடியுமா...?'; 'ம்ஹூம்.. என் சொத்தே அதான்!' - சன்னி லியோன்

Sunny Leon S Producer Urged Remove Her Porn Videos    | ஜிஸ்ம் 2  

மும்பை: சன்னி லியோனை கஷ்டப்பட்ட முழுக்கப் போத்தியும், அப்பப்போ கொஞ்சம் உரிச்சியும் காட்டி காசு பார்க்க பூஜா பட் முயற்சித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இணையதளங்களில் அவரது ஆபாசப் பட வீடியோக்கள் சக்கைப் போடு போடுகின்றன. காசும் குவிகிறதாம்.

சன்னி லியோனி அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரபல ஆபாசப் பட நடிகை. அவர் நடிக்காக ஆபாசப் படங்களே இல்லை எனும் அளவுக்கு இணையத்தில் பல ஆயிரம் வீடியோக்கள், படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இவரது பூர்வீகம் மும்பைதான். எனவே அங்கு நிர்வாணத்தை மட்டுமே அதிகம் அறிந்து அனுபவித்து வந்த சன்னி லியோனை, இழுத்துப் போர்த்தி மும்பையில் பாலிவுட் நாயகியாக அறிமுகம் செய்துள்ளார் பூஜா பட். சன்னி லியோனின் தொழில், அவரது ஆபாச வீடியோக்களின் ரேஞ்ச் எல்லாம் அறிந்த பிறகுதான் அவரை இங்கே அழைத்து வந்தார்கள்.

இப்போது சன்னியின் செக்ஸி உடம்பு, அவர் ஜிஸ்ம் 3 படத்தில் காட்டியிருக்கும் எக்குத் தப்பான கவர்ச்சி ஆகியவற்றைப் பார்த்த சினிமா ரசிகர்கள், 'அட எதுக்கு எட்டி எட்டிப் பார்க்கணும்... ஒரு எட்டு கூகுளைத் தட்டினா, ஒரு பிட்டு துணி கூட இல்லாம மொத்தமா அம்மணியோட வீடியோ, கேலரியைக் கொட்டிடுமே' என இணையத்தை நோண்டி பரவசமடைய ஆரம்பித்துள்ளனர்.

சன்னி லியோனுக்கு சொந்தமாக ஏகப்பட்ட இணையதளங்கள் உள்ளன. ஆபாசப் பட கேலரி, ஆபாச வீடியோக்கள் என அவரே ஆபீஸெல்லாம் போட்டு தன் நிர்வாணத்தையும், படுக்கையறை சமாச்சாரங்களையும் அப்லோட் செய்து வருகிறார். இதற்கென ஏகப்பட்ட ரசிகர்கள். சந்தா பணமே டாலர்களில் கொட்டுகிறது.

இப்போது ஜிஸ்ம் 2 தயாரிப்பாளரின் பிரச்சினையும் இந்த ஆபாச வீடியோ, கேலரிகள்தான். தம்மாத்துண்டு துணி கூட இல்லாமல் சன்னி லியோனைத் தரிசிக்கும் வாய்ப்பு மிக மிக சுலபத்தில் கிடைக்கும்போது, அரை குறை ஆடையுடன், அல்லது சிவப்புச் சேலை போர்த்திக் கொண்டு ஜிஸ்ம் 2ல் அவர் வருவதை ரசிப்பார்களா என்ற கேள்வி அவருக்கு. அதுமட்டுமல்ல. சமீபத்தில் வெளியான ஜிஸ்ம் 2 ஸ்டில்களைக் கூட யாரும் பெரிதாக பார்க்கவே இல்லையாம்.

இதன் விளைவு, நேற்று முன்தினம் மும்பை வந்திறங்கிய சன்னி லியோனிடம் விஷயத்தைச் சொல்லி, 'யம்மா கண்ணு.. கொஞ்ச நாளைக்கு அந்த பலான மேட்டர் படங்கள், கேலரிகளை ப்ளாக் பண்ண முடியுமா... யாவாரம் பாதிக்குமேன்னு கவலையா இருக்கு!" என்று கேட்டுக் கொண்டாராம்.

உடனே பதறியடித்த சன்னி லியோன், "நோ நோ... என்னோட சொத்தே அதுதான். ஜிஸ்ம் படத்து சம்பளத்தை விட அதில் நான் அதிகமா சம்பாதிக்கிறேன். அது வேற, இது வேற...", என்று கண்களை அகல விரித்துப் பேச, 'பேசாம அந்தப் படங்களையே டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம் போலிருக்கு' என முணுமுணுத்தபடி சென்றாராம்!

 

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா!

Rajesh Khanna The Only Super Star With 15 Hits

இந்தியத் திரையுலகம் எத்தனையோ சாதனை நடிகர்களைக் கண்டுள்ளது. அவர்களுக்கு நிகரான நடிகைகளையும் கண்டுள்ளது. ஆனால் ராஜேஷ் கன்னாவுக்கு நிகரான ஒருவர் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரிய பெரிய ஸ்டார்கள் வந்தார்கள் இருந்தார்கள் என்றாலும் முதல் முத்திரையைப் பதித்த முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மட்டுமே.

1965ல் பாலிவுட்டில் நடிக்கப் புகுந்த ராஜேஷ் கன்னா, ஆரம்பத்தில் நடித்த 3 படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் யாருடைய பார்வையிலும் அவர் விழவில்லை. ஆனால் ஆராதனாதான் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்படத் தொடங்கினார். பெண் ரசிகர்கள் இவருக்குப் போல எவரும் இல்லை. எங்கு போனாலும் துரத்தித் துரத்தி இவரை ரசித்துப் பார்த்தார்கள். இவரது காரைக் கூட விடாமல் துரத்தித் துரத்தி முத்தமிட்டு மகிழ்ந்தனர். கார் டயரில் ஒட்டியிருந்த மண்ணைக் கூட துடைத்து எடுத்துச் சென்றனர்.

ராஜேஷ் கன்னாவின் திரையுலக வாழ்க்கையே ஒரு சினிமாப் படம் போலத்தான் இருந்தது. மும்பையில் கஷ்டமான நிலையில் இருந்து வந்த கன்னா, பிலிம்பேர் இதழ் நடத்திய ஒரு திறமைப் போட்டியில் கலந்து கொண்டார். 1000 பேர் கலந்து கொண்ட அப்போட்டியில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகுதான் அவருக்கு நடிக்க வாய்ரப்பு கிடைத்தது. 1966ல் ஆக்ரி காட்டில் நடித்தார். பின்னர் காமோஷியில் நடித்தார். அதன் பிறகுதான் வரலாறு படைத்த ஆராதனா 1969ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பாலிவுட்டைப் போலவே சென்னையிலும் தமிழகத்திலும் ஓடி பெரும் வசூல் மற்றும் சாதனை படைத்த படமாகும். அப்படத்தின் பாடல்கள் இன்று வரை புகழ் பெற்றவை. அக்காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆராதனா பாடல்கள்தான்.

ஆராதனா படத்திற்குப் பிறகுதான் சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டார் ராஜேஷ் கன்னா. இந்தியத் திரையுலகிலேயே சூப்பர்ஸ்டார் என்ற பெயரைப் பெற்ற முதல் நடிகர் இவர்தான்.

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும் இவர்தான். இந்த நிமிடம் வரை இந்த சாதனையை இதுவரை இந்தியாவில் எந்த நடிகரும் முறியடிக்கவில்லை. முறியடிக்க முடியவில்லை.

காதி பதாங், சபர், இத்திபாக், ஆன் மிலோ சஜ்னா, ஹாத்தி மேரே சாத்தி ஆகியைவ ராஜேஷ் கன்னாவின் சூப்பர் ஸ்டார் பெருமையை மேலும் மேலும் வலுப்படுத்திய மெகா ஹிட் படங்களாகும்.

அதேபோல ராஜேஷ் கன்னாவுடன், அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஆனந்த் படமும் இன்று வரை ராஜேஷ் கன்னாவின் மணிமகுடப் படங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூகர், ஆஷா பரேக், டிம்பிள் கபாடியா ஆகியோர் இணைந்து படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

நிச்சயம், ராஜேஷ் கன்னாவின் மரணம்,பாலிவுட்டுக்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகுக்கே பெரும் இழப்புதான்...!

 

50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அமைதிப்படை -2

Manivannan Direct His 50th Movie

எண்பதுகளின் இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை தனது இயக்கத்தில் வெளியிட்ட பெருமைக்குரியவர் மணிவண்ணன்.

முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, விடிஞ்சா கல்யாணம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களை அப்படித்தான் ஆரம்பித்தார்.

இவரது படங்கள் தரத்திலும், எள்ளலிலும் கொடிகட்டிப் பறந்தவை. கோபுரங்கள் சாய்வதில்லையாக இருந்தாலும் சரி, இளமைக்காலங்களானாலும் சரி... ரசித்துப் பார்த்துவிட்டு வரலாம்.

தமிழில் த்ரில்லர் படங்களுக்கு தனி மரியாதை தந்தது இவரது நூறாவது நாள் படம்தான்.

மணிவண்ணனின் அமைதிப்படை, நையாண்டி - நக்கலின் உச்சம் எனலாம். அரசியலை இவர் அளவுக்கு அறிவார்த்தமாக சினிமாவில் 'சடையர்' செய்தவர்கள் குறைவு.

இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார் மணிவண்ணன். தோழர் பாண்டியன் படத்துக்குப் பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். நடிப்பில் மட்டும் கலக்கி வந்தார். மேலும் தனது அரசியல் - தமிழுணர்வை நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் வெளிப்படுத்தி வந்தார்.

ஈழத் தமிழர் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவராகத் திகழ்கிறார் மணிவண்ணன். இன்றைய இயக்குநர்கள் சீமான், சுந்தர் சி என பெரிய பட்டாளமே மணிவண்ணனிடமிருந்து வந்தவர்கள்தான்!

உடல்நிலை காரணமாக நடிப்பையும் குறைத்துக் கொண்ட மணிவண்ணன், இப்போது மீண்டும் ஆரோக்கியத்துக்குத் திரும்பியுள்ளார்.

தனது 50வது படமாக அமைதிப் படையின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக இவரது ஆஸ்தான நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். படத்தின் தலைப்பை இப்போதைக்கு இருவரும் இணைந்து கலக்கிய அமைதிப்படை பார்ட்-2 என பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.

அமைதிப்படை படத்தில் உள்ளதுபோல், வழக்கமான கேலி, கிண்டலை கலந்து திரைக்கதை அமைக்கப்படடுள்ளதாக மணிவண்ணன் கூறியுள்ளார். தற்போதை அரசியலில் ஈழம் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் வரையிலான பல சம்பவங்களையும் கலந்து காமெடி படமாக உருவாக்கப் போகிறாராம்.

 

இங்கிலீஷ் விங்கிலீஷில் அஜீத் இல்லை... மாதவன்தான்!

Ajith Not English Winglish

ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்திருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் இந்திப் படத்தில் அஜீத் நடிப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்றும், அந்த வேடத்தில் மாதவன்தான் நடிக்கிறார் என்றும் இன்று செய்தி வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம் இந்த இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்தப் படத்தில் தமிழ் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார். உடன் அடில் ஹூஸைன், மெஹ்தி நெபோ நடிக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்கும் இந்தப் படத்தில், அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்கவிருப்பது மாதவன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில், கனடாவின் புகழ்பெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மர்லின் மன்ரோவுக்கு ஆண்களை விட் பெண்களையே பிடிக்கும்?

Did Marilyn Monroe Only Love Women

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின் மன்ரோவைப் பிடிக்காத ஆண்களே இருக்க முடியாது. ஆனால் அவருக்கோ பெண்களை மட்டுமே பிடிக்குமாம். தன்னைப் போல அழகு படைத் பல பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவு கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார் மர்லின் மன்ரோ. அதைக் கேட்டு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பற்றிய செய்திகள்தான் அன்று முழுவதும்.

உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.

மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்தவர் மர்லின் மன்ரோ. இதற்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.

அக்காலத்தில் பிரபலமான ஜோன் கிராபோர்ட், பார்பரா ஸ்டான்விக், மெர்லின் டயட்ரிச், எலிசபெத் டெய்லர் ஆகியோருடன் மன்ரோ லெஸ்பியன் உறவு வைத்திருந்ததாக அவரே ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். இவர்கள் போக நதாஷா லிடஸ், பாலா ஸ்டிராஸ்பெர்க் ஆகியோருடனும் அவருக்கு லெஸ்பியன் உறவு இருந்ததாம்.

இதுதொடர்பான தகவல்களை மிஷல் மார்கன் விரைவில் வெளியிடவுள்ள Marilyn Monroe: Private And Undisclosed என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

இந்த நூலில், மர்லின் மன்ரோ மீது மோகம் கொண்டு திரிந்தோர் எண்ணிக்கை எண்ணி மாள முடியாதது. ஆனால் அவருக்கோ ஆண்கள் மீது துளியும் ஈடுபாடு வரவில்லை. அவருக்கு ஆண்களுடன் உறவு கொள்வதில் பிடித்தமும் இல்லை, அதை அவரால் சரியாக செய்யவும் முடியவில்லை. மாறாக, அவர் உறவு வைத்திருந்த பெண்களிடம் பெரும் இன்பத்தை துகித்ததாக அவரே கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் மிஷல்.

புத்தகத்தில் இன்னும் என்னவெல்லாம் இருக்கப் போகிறதோ...

 

உங்கவீட்டுப் பிள்ளையா நினைச்சி என்னை மன்னிச்சிடுங்க - ஹன்ஸ்ராஜ் சக்சேனா!

Saxena Apologises His Past Behavior

சென்னை: 'இது சன் டிவி படம். இங்க வேற மீடியாவுக்கு என்ன வேலை? உங்களை எவன் கூப்பிட்டான்...' - சன் டிவி படங்கள் ரிலீஸின் போதெல்லாம் மீடியாக்காரர்கள் எதிர்நோக்கிய அவமானம் இது. அதிலும் எந்திரன் நேரத்தில் உதாசீனத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டவர் சக்சேனா.

ஆனாலும் மீடியாக்காரர்களில் பெரும்பாலானோர் இவரைப் போன்றவர்களுக்காக தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. பாரபட்சமில்லாமல்தான் எழுதி வருகின்றனர் இன்னமும்!

ஆனால் காலச் சக்கரம் சுழலாமலா போய்விடும்...

இப்போது யாரை உதாசீனப்படுத்தினாரோ அவர்களையெல்லாம் மீண்டும் தேடி வர வேண்டிய நிலை சக்ஸேனாவுக்கு. சன் பிக்சர்ஸிலிருந்து ராஜினாமா செய்த பின், சில மாதங்கள் அமைதியாக இருந்தவர், இப்போது தன் பெயரில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்று புது நிறுவனம் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் ப்ரியாமணி நடித்த சாருலதா என்ற படத்தை வெளியிடுகிறார் (சூர்யாவின் மாற்றானுக்கு போட்டியாம்!!). அடுத்து தமிழ் - தெலுங்கு இருமொழிப் படமொன்றையும் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று சென்னை சத்யம் அரங்கில் நடந்த நான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சக்ஸேனாவும் வந்திருந்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கடந்த ஆண்டுகளில் நான் எப்படியெல்லாமோ நடந்து கொண்டேன். முன்பு நான் மீடியாவை நான் புறக்கணித்தது உண்மைதான். அதன் பின்னணி வேறு. நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க.. நான் உங்க வீட்டுப் பிள்ளை. ஆதரவு கொடுங்க," என்றார்!

இது எத்தனை நாளைக்கோ!

 

'பிறந்த நாள் விருந்தெல்லாம் ஓகே.. மனைவி எங்கேப்பா?'

http://tamil.oneindia.in/img/2012/07/28-dhanush-birthday-300.jpg
ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!

நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.

இருக்கட்டும்.

இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.

சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!
 

சூர்யா - கார்த்தி பெயரைப் பயன்படுத்தி சோனா - சோனியா அகர்வாலிடம் தர்மஅடி வாங்கிய இளைஞர்!

http://tamil.oneindia.in/img/2012/07/28-sonia-sona21-300.jpg
தன்னை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தம்பி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சரவணன் என்ற இளைஞருக்கு நடிகைகளிடம் தர்ம அடி கிடைத்துள்ளது.

நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சோனாவிடம்தான் இந்த இளைஞர் சிக்கி அடி வாங்கியுள்ளார்.

இந்த இளைஞர் முதலில் பிரபல மால் ஒன்றில் வேலை பார்த்தவராம். எப்படியோ அவர் சூர்யா- கார்த்தி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு எனப் பெற்று அதை தவறாக பயன்படுத்தி வந்தாராம்.

'என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்' என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சோனியா அகர்வாலை பார்ட்டியில் தற்செயலாக சந்தித்த சரவணன், அவரிடம் ஏதோ தவறாகக் கூறியிருக்கிறார். அவர் தமிழில் பேசியதால் புரிந்து கொள்ளாத சோனியா, அதை சக நடிகை சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை போட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.

சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் ஹோட்டலில் அனைவர் முன்னிலையிலும் சரவணனை புரட்டியெடுத்துவிட்டார்களாம்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு, கொஞ்ச நேரத்தில் சண்டை சமாதானமானதாம்.

சரி, யார் இந்த சரவணன்?
 

20 நிமிடங்களில் 20 செய்திகள்!

சின்னச் சின்ன செய்திகள் சுவாரஸ்யத்தை தரக்கூடியவை. அதுபோன்ற ஒரு செய்தி நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. கிரிக்கெட்டில் மட்டும்தான் 20-20 இருக்க முடியுமா என்ன? நாங்களும் 20 நிமிடத்தில் 20 செய்திகளைத்தருவோம் என்று களம் இறங்கியிருக்கின்றனர் சத்தியம் தொலைக்காட்சியினர்.

"சத்தியம் 20-20 செய்திகள்'' திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் சூடான 20 செய்திகளை 20 நிமிடங்களில் தொகுத்து ஒரு செய்திக் கதம்பமாக வழங்குகிறார்கள். சர்வதேச அளவில் தொடங்கி மாவட்டம் வரையிலான செய்திகளை இந்த 20-20 செய்திகளில் தெரிந்துகொள்ள முடியும்.
 

சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு - ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!

http://tamil.oneindia.in/img/2012/07/28-maatran-300.jpg
சூர்யா நடித்துளள மாற்றான் படத்தின் இசை வெளியீட்டை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பெரிய படங்களின் இசை வெளியீட்டை வெளிநாடுகளில் பிரமாண்டமாக நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை பெரிய விலைக்கு விற்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது.

அந்த வகையில் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டையும் சிங்கப்பூரில் நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விழா நடக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சாதனையாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
 

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வது தப்பா! - கேட்கிறார் மம்தா

http://tamil.oneindia.in/img/2012/07/28-mamta-mohnadas-300.jpg
சென்னை: நடிகைகள் திருமணமான பிறகும், நடிப்பைத் தொடர்வது தவறா என்று கேட்டுள்ளார் நடிகை மம்தா.

நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த ஆண்டு தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.

தமிழில் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து அவரிடம் பேசியபோது, "திருமணத்துக்குப் பின் சினிமாவில் தொடரக் கூடாது என நடிகைகளுக்கு மட்டும் என்ன சட்டமா.. ஆண்கள் நடிக்கத்தானே செய்கிறார்கள். திருமணம் ஆன பிறகும் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இனி ஆண்டுக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.
 

ஆன்மீகத்திற்கு 'ஷிப்ட்' ஆன தனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வந்தார்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-thanushree-dutta-300.jpg
பெங்களூர்: ஆன்மீகத்திற்கு மாறி விட்டதாக கூறப்பட்ட இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை கன்னடத்தில் நடிக்க போயிருக்கிறார்.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளைப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அதில் ஆண்களை வெறுக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் திடீரென ஆன்மீகத்திற்கு மாறினார். சினிமாவில் தான் பெரும் சிரமப்பட்டு விட்டதாகவும், இங்கு எல்லாமே போலி என்றும் அதிரடியாக கூறிய அவர் சினிமாவால் தான் இழந்தது அதிகம் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் மொட்டை போடவும் முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் மொட்டையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் தத்தா. கன்னடத்தில் உருவாகும் ஏனிது மனசல்லி என்ற படத்தில் நடிக்கிறாராம் தத்தா.

இருப்பினும் இப்படத்தில் தத்தாவின் தங்கச்சி இஷிதாதான் அறிமுகமாகிறாராம். முக்கிய வேடத்தில் தத்தாவும் நடிக்கவிருக்கிறார். ஏன் திடீரென மறுபடியும் வந்து விட்டீர்கள் என்று தத்தாவிடம் கேட்டால், என் தங்கச்சி இப்போதுதான் நடிக்க வந்துள்ளாள். அவளுக்கு இது புதுசு. எனவேதான் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறேன் என்றார்.

அது சரி, இவர் பட்ட கஷ்டத்தை, இவரது தங்கையும் படட்டும் என்ற நோக்கில் உதவிக்கு இருக்கிறாரோ என்னவோ...
 

கமல்ஹாசன் படத்தை மீண்டும் இயக்குகிறார் சக்ரி டோலட்டி?

http://tamil.oneindia.in/img/2012/07/29-kamal-chakri-toleti-300.jpg
கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான பில்லா 2 பாக்ஸ் ஆபீஸில் இரு வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் தற்போது வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்துப் போன இப்படம் மற்றவர்களைக் கவரத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்ரி டோலட்டி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அது கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்று கூறப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் பட இயக்கம் தொடர்பா சக்ரியுடன் பேச்சு நடந்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனுடன் நல்ல நட்பில் இருப்பதோடு, உன்னைப் போல் ஒருவனை ஹிட் படமாக்கியவர் என்பதாலும் சக்ரிக்கே தலைவன் இருக்கின்றான் படம் கிடைக்கும் என்று தெரிகிறது.

சக்ரி சலங்கை ஒலியில் கமல்ஹாசனை பாடாய்ப்படுத்திய குட்டிப் பையன் என்பது நினைவிருக்கலாம். இப்போது இயக்குநராகியுள்ள இவர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மறுபக்கம், தலைவன் இருக்கின்றான் படத்தை கமல்ஹாசனே இயக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை இதுகுறித்து தெளிவு ஏற்படாது என்றே தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு சக்ரியின் பெயர்தான் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதன் மூலம் தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமலும், ஆஸ்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான், ஊழல், கருப்புப் பணம் குறித்த கதை என்பதை கமல்ஹாசனே பூடகமாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
 

ஸ்ரீதேவி படத்தில் அஜீத்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-sridevi-ajith-300.jpg
ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் அஜீத் முக்கிய ரோலில் தலை காட்டவுள்ளாராம்.

இது கெஸ்ட் ரோல் என்றாலும் கூட முக்கியமான ரோலாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். பால்கி தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில், ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.

இதில் அஜீத் கெஸ்ட் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பகுதிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனராம். ஸ்ரீதேவியின் ரசிகர் அஜீத் என்பதால் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் ஒத்துக் கொண்டாராம் அஜீத்.

தமிழ்ப் பதிப்பில் அஜீத் நடித்துள்ளாராம். இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பலில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைக்கு வருகிறது.
 

அதுக்குள்ள ஏன் முத்திரை குத்துறீங்க... பார்வதி ஓமனக்குட்டன் விசனம்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-parvathy-omanakutan-300.jpg
நான் நடிச்சதே ஒரே ஒரு படம்தான். அதற்குள்ளாகவே என்னை ராசியில்லாத நடிகை என்று கூறுவது நியாயமா என்று விசனத்துடன் கேட்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

கேரளத்து பார்வதி தமிழில் பில்லா 2 படம் மூலம் நடிக்க வந்தார். நடிக்க வந்த முதல் படத்திலேயே அவருக்குக் கெட்ட பெயராகி விட்டது. பில்லா 2 படம் குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருவதோடு, பார்வதி நடிச்ச ராசிதான் படம் இப்படியாகிப் போச்சு என்றும் பேச ஆரம்பித்துள்ளனராம்.

இது பார்வதியின் காதுகளையும் எட்ட கடும் கவலைக்குள்ளாகியுள்ளாராம் பாரு. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்ததே ஒரு படம்தான். அது சரியாகப் போகவில்லையென்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக என்னை ராசியில்லாத நடிகை என்று கூறினால் எப்படி, இது நியாயமே இல்லையே என்று விசனப்படுகிறாராம்.

மேலும், எனக்கு இந்த ராசி, சென்டிமென்ட் இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. திறமையை மட்டுமே நம்புபவள் நான். எனவே ராசியில்லாத நடிகை என்று என்னைக் கூறாதீர்கள் ப்ளீஸ் என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக கேட்டுக் கொள்கிறார் பார்வதி.

இன்னும் ரெண்டு படம் பார்த்துட்டுக் கருத்தைச் சொல்லுங்கப்பா ஜோசியர்களே...!
 

ராஸ் 3 படத்துக்காக 'ரவுசான' போஸ் கொடுத்ததில் தப்பில்லை... பிபாஷா

No Qualms Going Bold Raaz 3 Bipasha Basu    | ராஸ் 3  

டெல்லி: ராஸ் 3 படத்துக்காக நான் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்ததில் எந்தத் தப்பும் இல்லை என்று கூறியுள்ளார் பிபாஷா பாசு.

விக்ரம் பட் இயக்க. மகேஷ் பட், முகேஷ் பட் தயாரிக்க உருவாகியுள்ள படம் ரஹாஸ் 3. ரொமான்டிக் திரில்லர் படமான இதில் பிபாஷா பாசு நாயகியாக நடித்துள்ளார். படு கவர்ச்சிகரமாக செக்ஸியாக நடித்துள்ளார்.

ராஸ் படத்தின் தொடர்ச்சியான இதில், இம்ரான் ஹஷ்மியும் நடித்துள்ளார். ஈஷா குப்தாவும் படத்தில் இருக்கிறார். இப்படத்தை செப்டம்பரில் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் படத்தின் போஸ்டர்கள் இப்போதே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. காரணம், பிபாஷாவின் கவர்ச்சிகரமான போஸ்கள்.

இப்படத்தில் கவர்ச்சிகரமாக, கிட்டத்தட்ட ஒட்டுத் துணியில்லாமல் கூட பிபாஷா நடித்துள்ளாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிபாஷா கூறுகையில், இதில் என்ன வெட்கப்பட வேண்டியுள்ளது. படத்தின் கதையில் அப்படி உள்ளது. அப்படி இருக்கும்போது நடிப்பதில் என்ன தயக்கம். நான் ஒரு நடிகை, கதை என்ன சொல்கிறதோ, கேட்கிறதோ அதைத் தர வேண்டியது எனது கடமை என்றார்.

உண்மையில் சில துணிச்சலான கவர்ச்சிகர் காட்சிகளில் பிபாஷாவை நடிக்க வைக்க இயக்குநருக்கே தயக்கம் இருந்ததாம். ஆனால் பிபாஷாதான் தட்டிக் கொடுத்து தைரியமா எடுங்க, நான் நடிக்கிறேன் என்று கூறி திரில்லைக் கொடுத்தாராம்.

 

வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...?

An Article On Vaali

கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான் என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.

"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.

எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?

சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.

""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.

இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.

இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.

சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?

கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?

கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?

வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!

சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?

திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...

சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.

சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.

கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.

"சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது -
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்த
நிட்காமிய ஞானம் - என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!'

இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?

இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.

கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!

நன்றி: தினமணி

 

ஆன்மீகத்திற்கு 'ஷிப்ட்' ஆன தனனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வந்தார்!

Thanushree Dutta Acts Again   

பெங்களூர்: ஆன்மீகத்திற்கு மாறி விட்டதாக கூறப்பட்ட இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை கன்னடத்தில் நடிக்க போயிருக்கிறார்.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளைப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அதில் ஆண்களை வெறுக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் திடீரென ஆன்மீகத்திற்கு மாறினார். சினிமாவில் தான் பெரும் சிரமப்பட்டு விட்டதாகவும், இங்கு எல்லாமே போலி என்றும் அதிரடியாக கூறிய அவர் சினிமாவால் தான் இழந்தது அதிகம் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் மொட்டை போடவும் முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் மொட்டையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் தத்தா. கன்னடத்தில் உருவாகும் ஏனிது மனசல்லி என்ற படத்தில் நடிக்கிறாராம் தத்தா.

இருப்பினும் இப்படத்தில் தத்தாவின் தங்கச்சி இஷிதாதான் அறிமுகமாகிறாராம். முக்கிய வேடத்தில் தத்தாவும் நடிக்கவிருக்கிறார். ஏன் திடீரென மறுபடியும் வந்து விட்டீர்கள் என்று தத்தாவிடம் கேட்டால், என் தங்கச்சி இப்போதுதான் நடிக்க வந்துள்ளாள். அவளுக்கு இது புதுசு. எனவேதான் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறேன் என்றார்.

அது சரி, இவர் பட்ட கஷ்டத்தை, இவரது தங்கையும் படட்டும் என்ற நோக்கில் உதவிக்கு இருக்கிறாரோ என்னவோ...

 

அதுக்குள்ள ஏன் முத்திரை குத்துறீங்க... பார்வதி ஓமனக்குட்டன் விசனம்!

Parvathy Omanakuttan Is Worried Over Billa 2

நான் நடிச்சதே ஒரே ஒரு படம்தான். அதற்குள்ளாகவே என்னை ராசியில்லாத நடிகை என்று கூறுவது நியாயமா என்று விசனத்துடன் கேட்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

கேரளத்து பார்வதி தமிழில் பில்லா 2 படம் மூலம் நடிக்க வந்தார். நடிக்க வந்த முதல் படத்திலேயே அவருக்குக் கெட்ட பெயராகி விட்டது. பில்லா 2 படம் குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருவதோடு, பார்வதி நடிச்ச ராசிதான் படம் இப்படியாகிப் போச்சு என்றும் பேச ஆரம்பித்துள்ளனராம்.

இது பார்வதியின் காதுகளையும் எட்ட கடும் கவலைக்குள்ளாகியுள்ளாராம் பாரு. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்ததே ஒரு படம்தான். அது சரியாகப் போகவில்லையென்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக என்னை ராசியில்லாத நடிகை என்று கூறினால் எப்படி, இது நியாயமே இல்லையே என்று விசனப்படுகிறாராம்.

மேலும், எனக்கு இந்த ராசி, சென்டிமென்ட் இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. திறமையை மட்டுமே நம்புபவள் நான். எனவே ராசியில்லாத நடிகை என்று என்னைக் கூறாதீர்கள் ப்ளீஸ் என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக கேட்டுக் கொள்கிறார் பார்வதி.

இன்னும் ரெண்டு படம் பார்த்துட்டுக் கருத்தைச் சொல்லுங்கப்பா ஜோசியர்களே...!

 

ஸ்ரீதேவி படத்தில் அஜீத்!

Ajith Kumar S Cameo Sridevi S English Vinglish

ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் அஜீத் முக்கிய ரோலில் தலை காட்டவுள்ளாராம்.

இது கெஸ்ட் ரோல் என்றாலும் கூட முக்கியமான ரோலாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். பால்கி தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில், ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.

இதில் அஜீத் கெஸ்ட் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பகுதிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனராம். ஸ்ரீதேவியின் ரசிகர் அஜீத் என்பதால் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் ஒத்துக் கொண்டாராம் அஜீத்.

தமிழ்ப் பதிப்பில் அஜீத் நடித்துள்ளாராம். இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பலில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைக்கு வருகிறது.

 

கமல்ஹாசன் படத்தை மீண்டும் இயக்குகிறார் சக்ரி டோலட்டி?

Chakri Toleti Helm Kamal Hassan Thalaivan Irukkindran

கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான பில்லா 2 பாக்ஸ் ஆபீஸில் இரு வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் தற்போது வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்துப் போன இப்படம் மற்றவர்களைக் கவரத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்ரி டோலட்டி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அது கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்று கூறப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் பட இயக்கம் தொடர்பா சக்ரியுடன் பேச்சு நடந்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனுடன் நல்ல நட்பில் இருப்பதோடு, உன்னைப் போல் ஒருவனை ஹிட் படமாக்கியவர் என்பதாலும் சக்ரிக்கே தலைவன் இருக்கின்றான் படம் கிடைக்கும் என்று தெரிகிறது.

சக்ரி சலங்கை ஒலியில் கமல்ஹாசனை பாடாய்ப்படுத்திய குட்டிப் பையன் என்பது நினைவிருக்கலாம். இப்போது இயக்குநராகியுள்ள இவர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மறுபக்கம், தலைவன் இருக்கின்றான் படத்தை கமல்ஹாசனே இயக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை இதுகுறித்து தெளிவு ஏற்படாது என்றே தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு சக்ரியின் பெயர்தான் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதன் மூலம் தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமலும், ஆஸ்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான், ஊழல், கருப்புப் பணம் குறித்த கதை என்பதை கமல்ஹாசனே பூடகமாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 

'பெட்டிங்' குறித்து படம் எடுக்கும் 'ரோஸ்' வெங்கடேசன்!

Rose Venkatesan Debut Direction

கிரிக்கெச் சூதாட்டம் குறித்து படம் இயக்கப் போகிறார் ரோஸ் வெங்கடேசன். அரவாணி ஒருவர் படத்தை இயக்குவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.

அரவாணியான ரோஸின் இயற் பெயர் ரமேஷ் வெங்கடேசன். அரவாணியான பின்னர் இவர் ரோஸ் வெங்கடேசன் ஆனார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் வந்த இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானார். இப்போது சினிமாவுக்கு வந்துள்ளார். ஒரு படத்தில் குத்தாட்டமும் போட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான படத்தை இயக்கப் போகிறாராம் ரோஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில், மெக்கானிகல் என்ஜினீயரிங் படித்தேன். பின்னர், அமெரிக்கா சென்று லூசியானா பல்கலைக்கழகத்தில்,பயோ மெடிகல் படித்தேன். அரவாணியாக மாறியபின், என் பெயரை ரோஸ் வெங்கடேசன் என்று மாற்றிக் கொண்டேன்.

ஒரு சினிமா படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்பது, ரொம்ப வருட கனவு. அந்த ஆசை எனக்குள் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கான சந்தர்ப்பம் இப்போது அமைந்து இருக்கிறது.

என் நீண்ட கால நண்பர் செந்தில்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தியாவிலேயே ஒரு சினிமா படத்தை இயக்கும் முதல் அரவாணி, நான்தான்.

படத்துக்கு, கிரிக்கெட் ஸ்கேன்டல் என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கிரிக்கெட் சூதாட்டத்தை கருவாக கொண்ட கதை. படம், ஆங்கிலத்தில் தயாராகிறது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்.

கிரிக்கெட் சூதாட்டத்துடன், திருநங்கைகள் பற்றியும் 30 சதவீத கதை இருக்கிறது. அதில், ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ஆங்கிலம் பேச தெரிந்த-கிரிக்கெட் ஆர்வம் உள்ளவர்களை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறோம். பிரபலமான சில நடிகர்களும் பங்கு பெறுவார்கள்.

படப்பிடிப்பை சென்னையிலும், இலங்கையிலும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார் ரோஸ்.