திருப்பதியில் அஜீத் - பில்லா 2 வெற்றிக்காக வேண்டுதல்!

|

Ajith Prays At Tirupati Billa 2 Suc

ரஜினியைப் பின்பற்றுவது என்று முடிவு செய்தாகிவிட்டது. படம் நடிப்பதில் ஆரம்பித்து, பேட்டி கொடுப்பது, விருது வாங்குவது என அனைத்திலுமே ரஜினி பாணிக்குத் திரும்பிவிட்டார் போலிருக்கிறது அஜீத்.

அடுத்து சாமி கும்பிடுவதிலும் அவர் பாதையிலேயே நடக்க ஆரம்பித்துள்ளார்.

ரஜினி தன் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அல்லது வெளியான பின்னரும் திருப்பதிக்குப் போய் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இப்போது அஜீத்தும் அந்த வழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

பில்லா-2 படம் வருகிற 13-ந்தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது.

இந்த நிலையில் படம் வெற்றிபெற திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் அஜீத். அவருடன் உறவினர்கள் சென்றிருந்தனர்.

அஜீத் வந்திருப்பது தெரிந்ததும் வழக்கம்போல, சாமியை விட்டுவிட்டு, அஜீத் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று சுற்ற ஆரம்பித்தது. பின்னர் தரிசனம் முடித்துவிட்டு கிளம்பினார் அஜீத்.

 

Post a Comment