ஆயிரமாவது எபிசோடை நோக்கி ‘பெண்ணே உனக்காக’

|

Penne Unakkaka Reaches 1000th Episode

பொதிகை தொலைக்காட்சியில் திங்கம் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி `பெண்ணே உனக்காக...'1000-வது எபிசோடை எட்டவிருக்கும் இத்தொடர், பெண்களின் வரவேற்பை பெற்ற தொடராகி இருக்கிறது.

பெண் தன் வாழ்க்கையில் தாயாய், தாரமாய், மகளாய், பல வகைகளில் பரிணமிக்கிறாள். அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அப்பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றம் அனைத்திற்கும் மகிழ்ச்சி என்பது உலகம் அறிந்த ஒன்று.

"பூப்பு முதல் மூப்பு வரை'' என்கிற நிகழ்ச்சியில் ஒரு பெண் பூப்பு எய்துவது முதல் மூப்பு முடியும் வரை நிகழக்கூடிய அனைத்து விதமான நிகழ்வுகளையும் விளக்கமாக எடுத்து உரைப்பதும், "என் கேள்விக்கு என்ன பதில்?'' நிகழ்ச்சியில் கணவன் மனைவிக்கும் ஏற்படுகிற ஐயங்களையும், அதனை தீர்ப்பது எப்படி என்பதை எடுத்து சொல்வதும் நிகழ்ச்சியின் தனிச்சிறப்பம்சம்.

குறிப்பாக பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளவும், சரியான மருத்துவரை அணுகவும், சரியான சிகிச்சையை பெறவும், சரியான தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்க இந்நிகழ்ச்சி பெண்களுக்கு உதவி வருகிறது. நிகழ்ச்சியை பிரபல மகப்பேறு மருத்துவ பேராசிரியர் ஜெயம் கண்ணன் வழங்கி வருகிறார். ஏ.கே.கம்யூனிகேஷன் சார்பில் நிகழ்ச்சியை தயாரித்து வழங்குபவர் அரசு கிருத்திகா.

 

Post a Comment