சினிமாவில் கதைதான் ஹீரோ

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகும் படம், 'சந்திரா'. இதில், ஸ்ரேயா ஹீரோயின். கணேஷ் வெங்கட்ராம் ஹீரோ. இவர்கள் தவிர பிரேம், விவேக் நடிக்கிறார்கள். ரூபா அய்யர் இயக்குகிறார். கவுதம் இசை அமைக்கிறார். படம் பற்றி நிருபர்களிடம் ஸ்ரேயா கூறியதாவது:
மன்னர் பரம்பரையின் இப்போதைய வாரிசுகளுக்கு இடையேயான காதல்தான் கதை. இதில் இளவரசியாக நடிக்கிறேன். சின்ன வயதில் கதை கேட்கும்போது என்னை இளவரசியாக கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது என்னை இளவரசி போல அலங்கரித்து நடிக்க வைக்கிறார்கள். இது சந்தோஷமாக இருக்கிறது. நிறைய நகைகள் போட்டு விதவிதமான சேலைகள் அணிந்து நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் வளரும் ஹீரோவுடன் நடிக்கிறேன். அதனால் என் இமேஜ் பாதிக்காது. எப்போதுமே படத்தின் ஹீரோ யார் என்று பார்ப்பதில்லை. கதை¬யும், அதில் என் கேரக்டரையும் மட்டும்தான் பார்ப்பேன். காரணம் எந்த ஒரு படத்திலும் கதைதான் ஹீரோ. கதைதான் அதற்கேற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறது. இந்தப் படத்தின் இளவரசி கேரக்டருக்கு கதை என்னை தேர்வு செய்திருக்கிறது. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசைதான். அதற்காக வருகிற படங்களில் எல்லாம் நடித்து எண்ணிக்கையை உயர்த்துவதால் என்ன பயன்? நல்ல படமாக அமையும்போது தொடர்ந்து நடிப்பேன்.


 

Post a Comment