திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. திருமணம் செய்வது சாதாரண விசயமில்லை. அதனால்தான் வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று கூறுவார்கள். திருமணம் செய்து கொள்பவர்களின் சிரமத்தை தெரிந்துதான் தற்போது நிறைய மேட்ரிமோனியல் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சிகளிலும் திருமண சேவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திருமணம் என்பது வெளிநாடுகளில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேர நிகழ்ச்சியாக நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் இந்திய கலாசாரத்தில் மட்டும்தான் திருமணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த கொண்டாட்டத்தை மனதில் கொண்டு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் `நீங்க நல்லா இருக்கணும்' நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.பொதுவாக திருமணம் என்றால் வரன்களை அறிமுகப் படுத்துவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் வரன்கள் அறிமுகத்தோடு திருமணத்திற்கு தேவையான, திருமண மண்டபங்கள் இந்தியா முழுவதும், ஒவ்வொரு ஊரிலும், சிறியது முதல் பெரியது வரை எங்கெங்கு எத்தனை திருமண மண்டபங்கம் இருக்கின்றன என்ற புள்ளி விவரங்கள் வரை தரப் படுகின்றன.
திருமணம் முடிந்தபின் மணமக்கள் தேனிலவு சென்று வர எளிதான விமான சேவையுடன் வெளிநாடுகளில் தரமான ஹோட்டல்களில் குறைந்த செலவில் தங்கவும், ஏற்பாடு செய்து தருகிறார்கள். திருமணத் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை என்றால் அவர்களது பிரச்சினைகளை மருத்துவர்கள் மூலம் சரி செய்கிறார்கள்.
வாழ்க்கையில் ஒரு மனிதனின் முழு வளர்ச்சியை உருவாக்கும் ஆரோக்கியமான நிகழ்ச்சித் தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை திருவிஷன் மீடியா சார்பில் ரவிகுமார் தயாரித்து இயக்குகிறார்.
Post a Comment