குடும்பத்திற்காக நடிப்பதை விட்டேன்– சினிமா செய்திகள் அர்‌ச்‌சனா‌

|

No Acting Only Anchoring Cinima Seithigal Archana

‘அரசி' சீரியலில் நடிக்கும்போதே நடிப்பிற்கு பை சொன்ன அர்ச்சனா இப்போது சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி வருகிறார். காம்பயரிங் மட்டும் போதும் என்று முடிவு செய்தது ஏன் என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் மடக்கினோம்.

நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே இந்தத் துறையில்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் மீடியாத்துறைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டுதான் வந்தேன். எனக்கு நடிப்பதைவிட, காம்பியரிங் செய்வதில்தான் அதிக விருப்பம்.

ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு இயக்குனர் சமுத்திரக்கனி முதன்முதலில் அரசி தொடரில் நடிப்பதற்கு அழைத்தார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்று பயந்தேன். அவர்தான் உன்னால முடியும் தைரியமா செய் என்று என்கரேஜ் செய்தார். ராதிகா மேடத்தோடு நடிக்கிற வாய்ப்பு வேறு. ஏன் வீண் செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் அரசி தொடர் மூலம் மக்கள் மனதில் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

அந்த நேரத்தில் எனக்கு திருமணம் ஆனதினால் பாதியில் விலகிவிட்டேன். நடிப்பு, காம்பியரிங், குடும்பம் என எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. நேரம் இருக்காது என்பதினால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன்.

என் திருமணம் பெற்றோர் பார்த்து முடிவு செய்த பின்புதான் காதலித்தோம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே ஆறுமாத இடைவெளி இருந்தது அப்போதுதான் காதலித்தோம். குடும்பம் என்று வந்தபிறகு அதைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். அதனால் நடிப்பதை விட்டு விட்டேன். தற்போது காம்பியரிங் மட்டும் செய்கிறேன்.

ரசிகர்கள் என்மீது அதிக அளவில் அன்பும் அக்கறையும் கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு என் கணவர் அமெரிக்காவில் இருந்தார். என் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து பார்த்து உடனுக்குடன் விமர்சிப்பார். அப்போதே ஏதாவது ஒரு ஷோ வந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு இப்படி பண்ணலாமே.. அப்படி பண்ணலாமே என்று சொல்லுவார்.

எந்த தவறு என்றாலும் வெளிப்படையாகச் சொல்வார். என் முதல் ரசிகரும், முதல் விமர்சகரும் என் கணவர்தான் என்று கூறி மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தார் அர்ச்சனா.

 

Post a Comment