'நான் ஈ' படம் தமிழில் வசூலை அள்ளி வரும் நிலையில், இந்த படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்ய இயக்குனர் ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை கொன்றவனை அடுத்தப்பிறவியில் 'ஈ' யாகி பழிவாங்கும் சிம்பிள் கதைதான். ஆனால், அதை எந்த வித 'ஈ'யடிச்சான் காப்பியும் இல்லாமல் சொன்ன விதத்தில் பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ராஜமவுலி. வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாகச் சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜமவுலிக்கு முதலில் ரெட்கார்பெட் வரவேற்பு தான் அளிக்க வேண்டும். இந்த படம் தெலுங்கிலும் செம ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கும் ராஜமவுலி, அபிஷேக் பச்சானிடம் படத்தை போட்டுக் காட்ட உள்ளார். அபிஷேக் பச்சானுக்கு படம் பிடித்தால் அவரை நானி கேரக்டரில் நடிக்க கேட்பேன் என்று ராஜமவுலி கூறியுள்ளார். அதே சமயம் தமிழல் வில்லனாக நடித்த சுதீப்பும், ஹீரோயினாக நடித்த சமந்தாவும் இந்தியில் நடிப்பார்கள் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
Post a Comment